உலக கோப்பை மல்யுத்தம் – வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை!!

0

மல்யுத்தத்துக்கான உலக கோப்பை தொடர்  செர்பிய தலைநகரான பெல்கிரேடில் நடைபெற்று  வருகிறது.  இதில் இந்தியா வீராங்கனை அன்ஷு மாலிக் வெள்ளி பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.

அன்ஷு மாலிக் :

இவர் ஒரு மல்யுத்த குடும்பத்தை சார்ந்தவர். இவரது தந்தை தரம்வீர் மாலிக், இவர் ஒரு சர்வதேச மல்யுத்த வீரர் .  இவருக்கு ஏற்பட்ட காயத்தினால் அவர் சர்வதேச அளவில் இருந்து ஓய்வு பெற்று கொண்டார். அன்ஷு மாலிக்கின் சகோதரன் மல்யுத்தத்துக்காக பயிற்சி சென்று கொண்டிருந்தார். அவரை பார்த்து இவரும் மிகுந்த ஆர்வத்தோடு தனது 12 வயதிலே பயிற்சியை ஆரம்பித்துள்ளார். இவர் ஜெகதீஷ் என்பவரிடம் மல்யுத்த பயிற்சியை மேற்கொண்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வெள்ளி பதக்கம் :

தற்போது உலக கோப்பை மல்யுத்த போட்டி செர்பிய  தலைநகரான பெல்கிரேடியல்  நடைபெற்று  வருகிறது.  அதில் இந்தியா சார்பாக அன்ஷு மாலிக் கலந்து கொண்டார். இவர் 57 கிலோகான இறுதி போட்டியில் பங்கேற்றார். மிகவும் சிறப்பாக விளையாடிய இவர் வெள்ளி பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.இவர் 1-5 என்ற கணக்கில் மால்டோவா நாட்டு வீராங்கனை அனஸ்டாசியா நிசிதாவிடம் தோல்வி கண்டுள்ளார்.

இவர் தங்க பதக்கத்தை தவறவிட்டது வருத்தத்துக்குரியதே.  இவர் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளதால் அவரது தந்தை மிகவும் மகிழ்ச்சி அடைந்து தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். அவர் கூறியதாவது ” நான் சர்வதேச அளவிலான போட்டிகளில் ஒரு பதக்கம் கூட பெறவில்லை, ஆனால் என் மகள் பெற்றிருப்பது எனக்கு மிகவும் பெருமைக்குரியதே ” என்று கூறி தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

‘யோகா’விற்கு விளையாட்டு போட்டி அந்தஸ்து – மத்திய அமைச்சகம் அறிவிப்பு!!

வெவ்வேறு பிரிவுகளில் விளையாடிய இந்திய வீராங்கனைகள் சரிதா (59 கிலோ), சோனம் மாலிக் (62 கிலோ), சாக்‌ஷி மாலிக் (65 கிலோ) ஆகியோர் தங்கள் பிரிவில் அரையிறுதிக்கு கூட செல்லாமல் காலிறுதியில் வெளியேறியது ஏமாற்றம் அளிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here