அதிரடியாக உயர்ந்து வரும் தங்கத்தின் விலை – பொதுமக்கள் கவலை!!

0

சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் பெண் குழந்தை பிறந்து விட்டாலே, பெற்றோர்கள் வயிற்றில் நெருப்பை கட்டி கொள்ளுவார்கள். காரணம், பெண்ணாய் பிறந்து விட்டால் அவள் வேறு வீட்டில் சென்று வாழக்கூடியவள். பெற்றோர்களுக்கு என்ன பயம் இருக்கும் என்றால் நாம் செல்லமாக வளர்த்து விட்டோமே அவள் அங்கு போய் எப்படி தன் தேவையை பூர்த்தி செய்து கொள்வாள் என்பது தான். இதன் காரணமாக தான் பெற்றோர்கள் பெண்ணின் திருமணத்தின் போது பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை வழங்கினர். நாளடைவில் இது வரதட்சணையாக மாறி விட்டது. இன்றும் கூட பெற்றோர்கள் தங்கள் செல்வாக்கை காட்ட தங்கத்தை தான் பயன்படுத்துகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

புகுந்த வீட்டிற்கு சென்ற பின்பும் பெண்கள் தங்கள் சிறுசேமிப்பை கூட குண்டு மணி தங்கத்தில் தான் முதலீடு செய்வர். நாளுக்கு நாள் தங்கத்தின் மதிப்பு கூடும் என்ற காரணத்தால் தங்கத்தால் இழப்பு ஏற்பட்டு விடுமோ என்ற பேச்சிற்கே இடம் இல்லை. இப்படி பலரின் வாழ்வியலோடு பொருந்தி போய் உள்ள தங்கம் இந்த மாதம் அதிரடியாக விலை உயர்வினை சந்தித்து வருகின்றது. இது அனைத்து தரப்பு மக்களையும் கவலையில் ஆழ்த்தி வருகின்றது. கடந்த இரண்டு நாட்களாக விலை உயர்ந்தாலும் சற்று தானே அதிகரித்து வருகின்றது என்று கவலையிலும் மக்கள் ஆறுதல் அடைந்தனர். ஆனால், இன்று தங்க விலை அதிகப்படியாக உயர்ந்துள்ளது.

இன்றைய விலை நிலவரம்:

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் (22 கேரட்) ஒரு சவரன் 144 ரூபாய் உயர்ந்து ரூ.37,808 என்ற விலை நிலவரத்தில் உள்ளது. ஒரு கிராம் 16 ரூபாய் உயர்ந்து ரூ.4,726 என்று விற்பனை செய்யப்படுகிறது. தூய தங்கம் (24 கேரட்) ஒரு கிராம் 16 ரூபாய் உயர்ந்து ரூ.5,110 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உலக கோப்பை மல்யுத்தம் – வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை!!

ஒரு சவரன் தங்கம் 144 ரூபாய் உயர்ந்து ரூ.40,880 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளியின் விலையும் நேற்றைய விலையை விட உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.71.50 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.71,500 என்று விற்பனை செய்யப்படுகிறது.

மற்ற இடங்களில் தங்க விலை நிலவரம் (22 காரட், ஒரு கிராமுக்கு)

மும்பை – ரூ. 4,852

பெங்களூர் – ரூ. 4,641

கேரளா – ரூ. 4,627

டெல்லி – ரூ. 4,857

கொல்கத்தா – ரூ. 4,882

ஓசூர் – ரூ. 4,699

பாண்டிச்சேரி – ரூ. 4,702

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here