‘யோகா’விற்கு விளையாட்டு போட்டி அந்தஸ்து – மத்திய அமைச்சகம் அறிவிப்பு!!

0

உடலையும், மனததையும் ஆரோக்கியப்படுத்தும் “யோகாசனத்தை” இன்று முதல் விளையாட்டுப் போட்டியாக முறைப்படி மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.  யோகாசனத்தை முறைப்படி விளையாட்டு போட்டியாக அங்கீகாரம் கொடுத்து ஆயுஷ் அமைச்சகம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

யோகாசனத்தை  முறையாக  பயின்றவர்கள் தங்கள் வாழ்க்கையில் நோய்  என்பதை அறிந்திருக்கவே மாட்டார்கள். ஏனென்றால் முறையாக யோகாவை செய்பவர்கள் உடலானது உள்ளேயும் வெளியேயும் மிகவும் ஆரோக்யமாகவும், பரிசுத்தமாகவும் இருக்கும்.  யோகாவின் பிறப்பிடம் இந்தியா தான். உலகில் யோகாவை அறிமுகப்படுத்திய பெருமை இந்தியாவையே சேரும். இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தான் நமது மத்திய  அரசு யோகாவை விளையாட்டு போட்டியாக அறிவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது குறித்து மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், “யோகா செய்வததற்கு மக்களை ஊக்குவிக்கவும், அதன் நன்மைகளை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவும், மக்களின் உடல் மற்றும் மனநலனை அதிகரிப்பதற்கும் தான் இந்த முயற்சி ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.

மெண்டல் டார்ச்சர் அனுபவித்தேன்’ – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் திடீர் ஓய்வு அறிவிப்பு!!

யோகாவை விளையாட்டுப் போட்டியாக  முறையாக அறிவிக்கும் நாளான இன்று எங்களுக்கு  மிகவும் பெரிய நாள். மேலும் இது மிகவும் நீண்ட பயணமாக இருக்கும் என நான் நம்புகிறேன்.  கேலோ இந்தியா, தேசிய மற்றும்  பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் யோகாசனம் ஒரு விளையாட்டு போட்டியாக அறிமுகம் செய்யப்படும்” என்று அவர் கூறி உள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here