உலகில் திறமைமிக்க தலைவர்கள் பட்டியல்.. 66% ஆதரவுடன் பிரதமர் மோடி முதலிடம்!!!

0

மார்னிங் கன்சல்ட் என்ற அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் உலகில் திறமை வாய்ந்த தலைவர்கள் பட்டியலில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி 66% வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

இது குறித்து மார்னிங் கன்சல்ட் நிருவனம் கூறியதாவது, “குறிப்பிட்ட 20 காரணிகளின் அடிப்படையில் இந்திய பிரதமர் மோடி, மற்ற அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்களை காட்டிலும் அதிக ஆதரவு பெற்று உலகில் திறமை வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்”. இவ்வாறு அந்த நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

முதல் 10 இடங்களை பிடித்த தலைவர்கள்:

  1. இந்திய பிரதமர் நரேந்திர மோடி – 66%
  2. இத்தாலி பிரதமர் மரியோ டிராகி – 65%
  3. மெக்சிகோ அதிபர் லோபஸ் ஆப்ரேடர் – 63%
  4. ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் – 54%
  5. ஜெர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல் – 53%
  6. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் – 53%
  7. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ – 48%
  8. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் – 44%
  9. தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன்- 37%
  10. ஸ்பெயினின் பெட்ரோ சான்செஸ் – 36%

இந்த பட்டியலில் குறிப்பாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் 53 சதவீத ஆதரவுடன் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார் மேலும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 44 சதவீத ஆதரவுடன் எட்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here