Friday, April 26, 2024

இந்திய கடற்படையில் பெண்கள் நியமனம் – வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு!!

Must Read

இந்திய போர்கப்பல்களில் உள்ள ஹெலிஹாப்டர்களை இயக்க முதல்முறையாக பெண் விமானிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக பாலின சமத்துவம் இந்தியாவில் உள்ள எல்லா படைகளிலும் கொண்டு வரபட்டுள்ளது.

பாலின சமத்துவம்:

இந்தியாவில் உள்ள அனைத்து படைகளிலும் பாலின சமத்துவத்தை கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனால் ராணுவத்தின் முப்படைகளில் பெண்களுக்கு சமமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு உயர் பொறுப்புகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

women in indian navy
women in indian navy

தற்போது, கடற்படையில் உள்ள போர்க்கப்பல்களில் ஹெலிகாப்டர்களை இயக்கும் ‘அப்சர்வர்’ என்ற பணிக்கு இரண்டு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில வருடங்களாக இந்த பணிக்கு பெண்கள் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் வரவேற்கப்படுகிறார்கள்:

இந்த பணிக்கு 17 பேர் தேர்தெடுக்கப்பட்டனர், அதில் 4 பெண்கள் இருந்தனர். அதில் தற்போது சப் லெப்டினன்ட் குமுதினி தியாகி, சப் லெப்டினன்ட் ரிதி சிங் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதனால் கடற்படை வரலாற்றில் புதிய சாதனை நிகழ்ந்துள்ளது. இந்நிகழ்ச்சி கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி ஐ.என்.எஸ் கருடா கப்பலில் நடைபெற்றது.

குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பெறுவது எப்படி?? எளிமையான முறைகள் இதோ!!

இந்த நிகழ்ச்சியிக்கு முதன்மை பயிற்சி அதிகாரி ரியர் அட்மிரல் ஆண்டனி ஜார்ஜ் தலைமை வகித்தார். அவர் சாதனை படைத்த வீரர்களுக்கு விருதுகளை வழங்கினார். பின் நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது “பெண்கள் கடற்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்வு. இது மற்ற பெண்களுக்கு ஒரு ஊக்குவிக்கும் விஷயமாகவும் இருக்கும்” என்றார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான டிப்ஸ்., இதையும் பாலோ பண்ணுங்க?

TNPSC குரூப் 2, 2A தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான டிப்ஸ்., இதையும் பாலோ பண்ணுங்க? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப் 2,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -