குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பெறுவது எப்படி?? எளிமையான முறைகள் இதோ!!

0
minors_aadhar
minors_aadhar

ஆதார் அட்டை என்பது இப்பொழுது அனைவர்க்கும் அவசியமான ஒன்று. ஆதார் உங்கள் அடையாளத்திற்காக ஒரு அட்டை ஆகும். அரசு சம்மந்தப்பட்ட எந்த செயல்பாடுகளிலும் ஆதார் அட்டை கட்டாயம் தேவை. பெரியவர்கள் மட்டுமல்ல குழந்தைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாகும். இப்பொழுது குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பெறுவது எப்படி என பார்க்கலாம் வாங்க.

ஆதார் அட்டை:

இந்திய குடிமகன்கள் அனைவர்க்கும் ஆதார் கார்டு என்பது அவசியமான ஒன்று. அனைத்து விதமான சேவைகளுக்கும் ஆதார் தேவைப்படுகிறது. வங்கி கணக்கு ஆரம்பிப்பதிலிருந்து வேலைக்கு சேருவது முதற்கொண்டு ஆதார் கார்டு தேவைப்படுகிறது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

தற்போது ஆன்லைன் மூலம் தரவிறக்கம் செய்துகொள்ளும் ஆதார் அட்டையையும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இடம் வாங்குவது, விற்பது, வருமான வரி தாக்கல் செய்வது, அரசு வழங்கும் சமையல் எரிவாயு மானியம் போன்றவற்றிற்கு ஆதார் கட்டாயம் தேவைப்படுகிறது.

How-To-Apply-For-Aadhar-Card-For-Kids-And-Children
How-To-Apply-For-Aadhar-Card-For-Kids

இந்த ஆதார் குழந்தைகளுக்கு அவ்வளவு அவசியம் இல்லையென்றாலும் இப்பொழுதே அவர்களுக்கு ஆதார் அட்டையை பெற்றுக் கொண்டால் எதிர்காலத்தில் எந்த சிக்கலும் ஏற்படாது. மேலும் பள்ளிகளில் சேர்க்கும் போது ஆதார் இருந்தால் எளிதாக சேர்த்து விடலாம்.

குழந்தைகளுக்கு ஆதார்:

  • குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பதிய அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு குழந்தையை அழைத்துச் செல்ல வேண்டும். இதற்கு குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தேவை.
baal aadhaar
baal aadhaar
  • உங்கள் குழந்தை பள்ளிக்கு செல்லும் பருவத்தை அடைந்து விட்டால் பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம். அதன்பின் குழந்தைக்கு புகைப்படம் எடுக்கப்படும். ஐந்து வயதிற்கு கீழ் உள்ள குழந்தை என்றால் பயோமெட்ரிக் அடையாளங்கள் எடுக்கப்பட மாட்டாது.
  • ஆதார் எண்ணுக்கான விபரங்கள் நீங்கள் பதிவு செய்திருந்த தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக வரும். பிறகு 90 நாட்களில் நீங்கள் கொடுத்திருந்த முகவரிக்கு உங்கள் ஆதார் அட்டை அனுப்பி வைக்கப்படும்.
minors_aadhar
minors_aadhar
  • ஐந்து வயதிற்குள் இருக்கும் குழந்தைக்கு நீல நிறத்தில் பால் ஆதார் அட்டை வழங்கப்படும். ஐந்து வயதை அடைந்தவுடன் அவர்களுக்கு பயோமெட்ரிக் புகைப்படம் புதிதாக எடுக்கப்பட்டு ஆதார் அட்டையை அப்டேட் செய்ய வேண்டும். மேலும் 15 வயது ஆனவுடன் மற்றொரு முறை ஆதார் அட்டையை அப்டேட் செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here