ICC- யின் சிறந்த அசோசியேட் விருது அறிவிப்பு.., தட்டிச் சென்ற முக்கிய வீரர்கள்!!!

0
ICC- யின் சிறந்த அசோசியேட் விருது அறிவிப்பு.., தட்டிச் சென்ற முக்கிய வீரர்கள்!!!
ICC- யின் சிறந்த அசோசியேட் விருது அறிவிப்பு.., தட்டிச் சென்ற முக்கிய வீரர்கள்!!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கடந்த ஆண்டின் அசோசியேட் வீரர், வீராங்கனையை தேர்ந்தெடுத்துள்ளனர்.

ICC

இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து போன்ற அனைத்து நாடுகளும் ICC சார்பில் நடைபெறும் போட்டிகளில் தீவிரமாக விளையாடி வருகின்றனர். இதை தொடர்ந்து இந்த ஆண்டு ஒரு நாள் உலக கோப்பை தொடரும் வரவிருப்பதால் அதற்காகவும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இப்படி ICC சார்பில் நடைபெறும் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர், வீராங்கனைகளுக்கு ICC விருதுகளை வழங்கி கவுரவிக்கும். அந்த வகையில் ICC 2022 ஆண்டுக்கான அசோசியேட் விருதை அறிவித்துள்ளனர். அதன்படி ஆடவருக்கான சிறந்த அசோசியேட் விருதை நமீபியாவின் கெர்ஹார்ட் எராஸ்மஸ் தட்டிச் சென்றுள்ளார்.

பும்ரா அணிக்கு திரும்புவாரா?? இல்லையா?? ரோஹித் பதிலால் குழம்பிய ரசிகர்கள்!!!

அதே போன்று மகளிருக்கான சிறந்த அசோசியேட் விருதை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் ஈஷா ஓசா வென்றுள்ளார். இவர்கள் இருவரும் கடந்த வருடம் நடைபெற்ற போட்டிகளில் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இதை தொடர்ந்து ICC ஆடவர் மற்றும் மகளிர் டி20 கிரிக்கெட் விருது இன்று அறிவிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here