வாட்ஸ் அப்பின் புதிய அம்சத்தால் காண்டாகிய ஆண்ட்ராய்டு பயனர்கள்.. என்ன காரணம் தெரியுமா?

0

தற்போது அனைத்து தரப்பு மக்களும் தங்கள் மொபைல் போன்களில் மிக அதிகமாக பயன்படுத்தும் செயலிகளில் வாட்ஸ் அப்பிற்கு ஒரு முக்கிய இடம் உண்டு. தங்கள் பயனர்களுக்கு சிறப்பான சேவை அளிப்பதற்காகக் வாட்ஸ் அப் நிறுவனமும் தொடர்ந்து பல புதிய அப்டேட்டுகளை அந்த செயலியில் புகுத்தி வருகிறது.

அதுவும் பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப்பை வாங்கிய பிறகு அசத்தலான பல புதிய அம்சங்கள் வாட்ஸ் அப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. சமீபத்தில் கூட பேஸ்புக் ஷாப்ஸ் என்ற அம்சம் வாட்ஸ்அப்பில் சேர்க்கப்பட உள்ளதாக மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்தார். இந்நிலையில் வாட்ஸ் அப்பில் வியூ ஒன்ஸ் என்ற புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட்...

இந்த வியூ ஒன்ஸ் அம்சத்தின் தனி சிறப்பு என்னவென்றால், இந்த அம்சத்தை பயன்படுத்தி அனுப்பப்படும் குறுந்தகவல்கள் அல்லது வீடியோக்களை பெறுநர்கள் ஒரு முறை ஓபன் செய்து பார்த்தவுடன், அந்த தகவல்கள் பெறுநர்களின் வாட்ஸ் அப்பிலிருந்து நீக்கப்பட்டுவிடும். ஆனால் Screen shot மூலமாகவோ அல்லது Screen Recording மூலமாகவோ இந்த தகவல்கள் சேமிக்கபடலாம்.

தற்போது இந்த வசதி ஆப்பிள் ஐ-போன் பயனர்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆண்ட்ராய்டு வாசிகள் எப்பொழுது இந்த அப்டேட்டை தாங்கள் பெற முடியும் என்று காத்து கொண்டுள்ளனர். இந்த வசதியை iOS 10.0 மற்றும் அதன் பின்னர் வந்த அனைத்து ஐ-போன்களிலும் பயன்படுத்த முடியும். மேலும் வரும் காலங்களில் இந்த வசதி ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here