எந்தெந்த கிழமைகளில், என்னென்ன வேலைகளை செய்யலாம்?? ஆன்மீக விளக்கம்!!

0

அந்த காலத்தில் முன்னோர்கள் எந்தெந்த கிழமைகளில் எந்த மாதிரியான வேலைகளை செய்யலாம் என்று வகுத்துள்ளனர். இதற்கு பின்னால் பெரிய காரணங்களும் உள்ளன. ஆனால் இன்றைய தலைமுறையினர் பலரும் அதனை பின்பற்றுவதில்லை. இப்பொழுது ஒவ்வொரு கிழமைகளிலும் என்ன வேலைகளில் ஈடுபடலாம் என்பதை இந்த பதிவில் காணலாம்.

நல்ல காரியம் செய்ய ஏற்ற கிழமைகள்:

ஒருவர் காலத்தினையும், நேரத்தினையும் பார்க்கலாம் ஒரு காரியத்தில் இறங்குவது ஆழம் தெரியாமல் காலை விடுவதற்கு சமம். காலமும், நேரமும் செய்யாததை வேறு எதுவும் செய்ய விடாது என்பது பழமொழி. எனவே தான் நாள் கிழமை பார்த்து சில காரியங்களில் ஈடுபட வேண்டும்.

ஞாயிறு

Sunday-
Sunday-

ஞாயிறு கோவில் செல்வதற்கு உகந்த நாளாகும். மேலும் சூரிய பகவானுக்கு உகந்த நாள் என்பதால் அரசாங்கம் சம்மந்தமான வேலை, திருமணம், பெற்றோர்களுக்கு உதவிகளை செய்ய மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற செயல்களை செய்ய ஞாயிற்றுக் கிழமை உகந்ததாக இருக்கும் என சாஸ்திரம் கூறுகிறது.

திங்கட்கிழமை

Monday
Monday

திங்களில் புதிய வீடு வாங்குதல், இரும்பு சம்மந்தப்பட்ட பொருட்களை வாங்குவது மற்றும் வீட்டு மனை வாங்க உகந்த நாளாக கருதப்படுகிறது. மேலும் வெள்ளி, தங்கம் போன்ற பொருட்களை வாங்கலாம்.

செவ்வாய்

tuesday
tuesday

செவ்வாய் முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் கோவில்களுக்கு சென்று வரலாம். மேலும் வீடு வாங்குதல் மற்றும் வீடு வாங்குவதற்காக திட்டம் தீட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடலாம். உங்கள் தொழிலுக்கு சம்மந்தமான உபகரணங்களை வாங்கலாம்.

புதன்

wednesday
wednesday

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்நாளில் எந்த ஒரு நல்ல காரியத்தையும் நாம் செய்யலாம். திருமணம், ஜாதகம் பார்க்க செல்வது, திருமணத்தை பற்றி பேசுவது போன்றவற்றை இந்நாளில் செய்யலாம். மேலும் கல்வி சார்ந்த வேலைகளை இந்நாளில் செய்து முடிக்கலாம்.

வியாழன்

thursday
thursday

வியாழன் குரு பகவானுக்கு உகந்த நாள் என்பதால் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். ஏதாவது பயிற்சி வகுப்புகளில் சேரலாம். ஜாதகம் பார்ப்பது, தியானம் , உடற்பயிற்சி வகுப்புகளில் சேரலாம்.

வெள்ளி

friday
friday

வெள்ளி சுக்ரனுக்கு உகந்த நாளாகும். மேலும் வெள்ளிக் கிழமை என்றாலே அது மங்களகரமான நாள் ஆகும். இந்நாளில் வாகனம் வாங்குவது, வங்கி சம்மந்தமான விஷயங்கள், பணம் சேமித்து வைப்பது போன்றவற்றை செய்யலாம்.

சனி

saturday
saturday

சனிக் கிழமையில் மருத்துவமனைக்கு செல்வது, உங்கள் தொழிலுக்கு ஏற்ற பொருட்களை வாங்குவது, விவசாயம் சம்மந்தப்பட்ட வேலைகளை துவங்குவது போன்றவற்றை செய்யலாம். மேலும் இன்றைய நாளில் வழக்கு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை கையாண்டால் வெற்றி கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here