சூப்பரான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ‘முட்டை சாதம்’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0
egg rice
egg rice

காலையில் பள்ளி மற்றும் வேலைக்கு செல்லும்போது அவசரமாக கிளம்புவோம். இந்த அவசரத்தில் மதிய உணவிற்கு கடமைக்காக செய்து கொண்டு செல்கிறோம். இதனால் பசியும் அடங்காமல், வாய்க்கு ருசியாகவும் சாப்பிட முடியாமல் போகிறது. இப்பொழுது சூப்பரான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ‘முட்டை சாதம்’ எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

முட்டை – 3

பட்டை

கிராம்பு

இஞ்சி – சிறிது

பூண்டு – 3

பச்சைமிளகாய் – 3

கருவேப்பிலை

வெங்காயம் – 2

மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

தக்காளி – 2

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

முதலில் சாதத்தை வடித்து ஒரு தட்டில் பரப்பி காய வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, பட்டை, கிராம்பு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அதில் பச்சை மிளகாவை சேர்க்கவும். நன்கு வதங்கியதும் அதில் சிறிதாக நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

egg rice
egg rice

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்க்கவும். உப்பு சேர்த்து வதக்கினால் தக்காளி நன்கு வதங்கும். அதன் பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் மற்றும் கரம் மசாலா போன்றவற்றை சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்கு வதக்கவும்.

egg rice
egg rice

அதன் பிறகு கடாயில் இருக்கும் அந்த கலவையை ஓரமாக ஒதுக்கி இடப்புறம் சிறிது எண்ணெய் ஊற்றி முட்டையை உற்ற வேண்டும். அதில் சிறிது மிளகுத்தூள், உப்பு சேர்த்து கிளறவும். முட்டை தனித்தனியாக பிரிந்து வரும்போது அந்த கலவையுடன் சேர்த்து மொத்தமாக கிளறவும். இப்பொழுது நாம் காய வைத்திருக்கும் சாதத்தை இதில் சேர்த்து மெதுவாக அடிபிடிக்காமல் கிளற வேண்டும். 5 நிமிடங்கள் தொடர்ந்து வதக்கி கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான ‘முட்டை சாதம்’ தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here