T20 World Cup.., வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு.., இனி தான் ஆட்டமே ஆரம்பிக்க போகுது!!

0
T20 World Cup.., வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு.., இனி தான் ஆட்டமே ஆரம்பிக்க போகுது!!
T20 World Cup.., வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு.., இனி தான் ஆட்டமே ஆரம்பிக்க போகுது!!

ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பை!!

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் நவம்பர் 23ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணி முதல் ஆளாக வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. இதனை தொடர்ந்து நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் வெளியிட்டன. இந்திய அணி வீரர்களின் விவரங்களை சமீபத்தில் தான் வெளியிட்டது. இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம், தங்களின் டி20 உலகக்கோப்பை அணியை அறிவித்துள்ளது.

இந்த அணிக்கு முதல் முறையாக நிக்கோலஸ் பூரன் தலைமை தாங்குகிறார். துணை கேப்டனாக ரோவ்மேன் பவல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த T20 உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி சுற்றில் வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைய முடியும். இதனால் வெஸ்ட் இண்டீஸ் தகுதி சுற்று ஆட்டத்திற்கான முதல் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. மேலும் உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலிய அணியுடன் இரு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

டி20 உலகக் கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி:

நிக்கோலஸ் பூரன் (கேட்ச்), ரோவ்மேன் பவல், யானிக் கரியா, ஜான்சன் சார்லஸ், ஷெல்டன் காட்ரெல், ஷிம்ரோன் ஹெட்மையர், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசைன், அல்சாரி ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், கைல் மேயர்ஸ், ஓபேட் மெக்காய், ரெய்மோன், ரெய்மான் ஒடியன் ஸ்மித்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here