மேற்கு வங்க முதல்வர் பிரதமர் மோடிக்கு கடிதம்!!!

0

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொரோனா தடுப்பூசி வேண்டி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

முதல்வர் தடுப்பூசி வேண்டி பிரதமர் மோடிக்கு கடிதம்:

நாட்டின் பிற மாநிலங்களைப் போல மேற்கு வங்கமும் கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 19,445 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் மேற்கு வங்கத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,90,867 ஆக உயர்ந்துள்ளது.

இதனை கட்டுப்படுத்த அம்மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி பல்வேறு தடுப்பு நடவடிக்கைளை மேற்கொண்டுவருகிறார். இருந்த போதிலும் கொரோனா 2ஆம் அலையின் பரவல் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.

அதில் முன்னுரிமைத் துறைகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதாவது ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள், பாதுகாப்பு, வங்கிகள், காப்பீடு, அஞ்சல் மற்றும் தந்தி, நிலக்கரி மற்றும் இதே போன்ற பிற துறைகளில் பணியாற்றும் மக்களுக்கு தாமதம் இல்லாமல் தடுப்பூசிகளை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here