கவர்ச்சிகரமான வசதிகளுடன் அறிமுகமான ‘வோல்க்ஸ்வேகன் டி ராக்’ SUV கார் – 19.99 லட்சத்திற்கு WORTH ஆ..?

0

இந்தியாவில் வோல்க்ஸ்வேகன் டி ராக் SUV ரக காரை அறிமுகம் செய்துள்ளது. இது தற்போது விற்பனையில் இருக்கும் கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டா, எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர், நிசான் கிக்ஸ் மற்றும் ரெனால்ட் கேப்டூர் போன்ற கார்களுக்கு கடுமையான போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.

வோல்க்ஸ்வேகன் டி ராக் சிறப்பம்சங்கள்:

என்ஜின் – 5 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின்
திறன் – அதிகபட்சமாக 150 ஹெச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க்
ட்ரான்ஸ்மிஷன் – 7 வேக டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்

இந்த காரில் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டெயில் விளக்குகள், டூயல் டோன் அலாய் வீல், முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டு உள்ளன.

பாதுகாப்பு வசதிகள்:

வோல்க்ஸ்வேகன் டி ராக் காரில் ஆறு ஏர்பேக், ஏபிஎஸ் உடன் இபிடி, இஎஸ்சி, டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு மற்றும் பார்க்கிங் கேமரா போன்றவை உள்ளன. மேலும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், இரு விதமான ஏசி கட்டுப்பாடு, 8.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ‘வியன்னா’ லெதர் இருக்கைகள் வழங்கப்பட்டு உள்ளன.

இந்தியாவில் இதன் விலை ரூ. 19.99 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here