என்கிட்டே இப்படி தான் நடந்துப்பான்…எனக்காக ஒன்னுமே செஞ்சதில்ல – கண்ணனை விளாசிய விஜே தீபிகா!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்ல கண்ணனுக்கு ஜோடியா நடிச்சு பாப்புலர் ஆன சின்னத்திரை நடிகை விஜே தீபிகா தற்போது பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு இன்டெர்வியூ கொடுத்துள்ளார். அவர் கண்ணன் ரோலில் நடித்து வரும் சரவணனை குறித்து ஷேர் செய்த தகவல்கள் சோசியல் மீடியாவில் படு வைரலாக பரவி வருகிறது. மேலும், சரவணன் – விஜே தீபிகாவுக்கு இடையில் இருப்பது நட்புத்தானா? இல்லை அதையும் தாண்டியா? அப்டிங்குறதும் தெரிய வந்திருக்கு.

அதாவது, பாண்டியன் ஸ்டார்ஸ் சீரியல்ல ஐஸ்வர்யாவாக இடையில் என்ட்ரி கொடுத்த தீபிகா சில பிரச்சனைகளால் இடையிலேயே விலகினார். அதுக்கு பிறகு சீரியல் பக்கம் ஆளு காணாம போனாலும், சரவணன் கூட சேர்ந்து இன்ஸ்டாக்ராமுல ரீல்ஸ் போட்டுட்டு தான் இருந்தாங்க. இதுனால ரசிகர்களும் ரெண்டு பேருக்கு இடையில ஹெமிஸ்ட்ரி ரொம்ப நல்லா இருக்கே, நீங்க பிரண்ட்ஸ் மட்டும் தானா ? அப்டின்னு கேள்வி கேக்க ஆரம்பிச்சாங்க.

அதுவே நாளடைவுல இது காதல்லா தான் இருக்கும்ன்னு ரசிகர்களும் உறுதியே செஞ்சிட்டாங்க. அதுக்கும் ரெண்டு பேர் சைடுல இருந்தும் எந்த மறுப்பும் வரலை. இப்படி இருக்கையில் ஒரு இன்டெர்வியூல விஜே தீபிகாவிடம் கண்ணன் உங்களுக்கு மறக்கமுடியாத அளவுக்கு என்ன வாங்கி குடுத்துருக்காங்க என கேட்க, அவன் எனக்கு ட்ரெஸ் கூட வாங்கி குடுத்தது இல்ல. ஸ்பீக்கர் தான் வாங்கி குடுத்திருக்கான் என கூறினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும், ஒரு டிரஸ்ஸ எடுத்து காமிச்சு இது கண்ணன் கூட ரீல்ஸ் பண்றதுக்காகவே டிசைன் பண்ணி வாங்குனது, ஆனா இன்னும் வரைக்கும் பண்ணல. அதே மாதிரி இதுநாள் வர இந்த particular ட்ரெஸ்ல அழகா இருக்க அப்படினு அவரனும் சொன்னதில்லை, நானும் கேட்டதில்லை. ஆனால் ஆக்ட்டிங் -ல நிறைய பாராட்டுவான். சிம்பிளா சொல்லனும்னா தீபிகாவை தீபிகாவா பார்த்து அவன் எனக்கு பாராட்டு கொடுத்ததில்ல என சிறு புன்னகையுடன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here