பேங்கில் பணம் போட்டுள்ளீர்களா? அப்போ உங்களுக்கு எச்சரிக்கை!! வங்கி கணக்கு முடங்கும் அபாயம்!

0

இன்னும் இரண்டு நாட்களுக்குள் KYC முடிக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கப்படும் என வாடிக்கையாளர்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி எச்சரித்துள்ளது.

வங்கி கணக்கு முடக்கப்படும்:

உலகில் மிகவும் பழமை வாய்ந்த வங்கிகளில் ஒன்றான வங்கி தான் பஞ்சாப் நேஷனல் வங்கி. எல்லா வங்கிகளை போலவும் பணங்கள் மற்றும் நகைகளை பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கும் இவ்வங்கி பெரிதும் பங்காற்றுகிறது. மேலும் பணங்களை நமக்கு தேவையான இடத்திற்கு வெகுவேகமாக அனுப்ப வங்கி முற்றிலும் பயன்படுகிறது.

அது மட்டும் இன்றி நமக்கு தேவையான வீட்டு லோன், தனிப்பட்ட லோன் போன்ற வகையான லோன்களை மிகவும் கணிசமான வட்டியில் வாங்கி தருகிறார்கள். இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதாவது, முன்னதாக மார்ச் 31 ஆம் தேதிக்குள் KYC முடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பின்னர் ஆகஸ்ட் 31 வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் ஆகஸ்ட் 31 வருவதற்கு இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில், KYC முடிக்காவிட்டால் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்று வாடிக்கையாளர்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி எச்சரித்துள்ளது. இதனால் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தையும் எடுக்க முடியாது. இதர முக்கிய வங்கி சேவைகளையும் பயன்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆன்லைன் மோசடி கும்பல்கள் ஏமாற்றி வருவதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here