எதற்கு இந்த தீடீர் முடிவு – உலக கோப்பைக்கு பிறகு விராட் கோலி ஓய்வா?

0
எதற்கு இந்த தீடீர் முடிவு - உலக கோப்பைக்கு பிறகு விராட் கோலி ஓய்வா?
எதற்கு இந்த தீடீர் முடிவு - உலக கோப்பைக்கு பிறகு விராட் கோலி ஓய்வா?

சர்வதேச தொடர்களின் முன்னாள் கேப்டன் விராட் கோலி T20 உலக கோப்பைக்கு பிறகு ஓய்வை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

காரணம் என்னவா இருக்கும்?

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தற்போது ஆசிய கோப்பை தொடரில் விளையாடி வருகிறார். இந்நிலையில் இவர் குறித்த தகவல் ஒன்று வெளியாகியதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த விஷயம் உண்மையா என்று உலக கோப்பைக்கு பிறகு தான் தெரியவரும். அதாவது விராட் கோலி T20 உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணியில் இருந்து விலகி ஓய்வை அறிவிக்க உள்ளதாக தெரிகிறது. ஏனென்றால் இவர் கடந்த சில காலமாக மோசமான பார்மில் விளையாடி வந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் பல தொடர்களில் இவருக்கு இந்திய கிரிக்கெட் நிறுவனம் ஒய்வு கொடுத்தது. இந்நிலையில் அவருக்கு ஆசிய கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த தொடருக்கான முதல் போட்டியில் களமிறங்கிய விராட் 34 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து மீண்டும் ஓரளவிற்கு பார்முக்கு திரும்பி உள்ளார். ஆனால் அவர் இன்னும் முழுமையாக பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. மேலும் இந்த ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே ஆஸ்திரேலியாவில் நடைபெறும் T20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.

எதற்கு இந்த தீடீர் முடிவு - உலக கோப்பைக்கு பிறகு விராட் கோலி ஓய்வா?
எதற்கு இந்த தீடீர் முடிவு – உலக கோப்பைக்கு பிறகு விராட் கோலி ஓய்வா?

ஆனால் அந்த தொடருக்கு பிறகு அவர் சர்வதேச தொடர்களான ஒரு நாள், T20, டெஸ்ட் போன்ற தொடர்களில் விளையாடுவாரா என்று சந்தேகம் நீடித்துள்ளது. ஏனென்றால் இவர் இன்னும் பார்முக்கு திரும்பாத நிலையில் இவர் மீது பல விமர்சனங்கள் கிரிக்கெட் வட்டாரங்களில் இருந்து எழுந்தது. இதனால் இதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் விராட் ஓய்வு பெற உள்ளதாக சமூக வலைதளங்களில் இது போன்ற விஷயங்கள் உலா வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here