ராஜா ராணி நாயகனுக்கு மனைவி கொடுத்த ஷாக் சர்பரைஸ்.., ஆலியா-சஞ்சீவ் ஜோடிக்கே டப் கொடுப்பாங்க போலையே!!

0

கலர்ஸ் டிவியில் ஹிட் அடித்த சீரியல்களில் ஒன்றான திருமணம் தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான புது முக நடிகர் தான் சித்து. இவர் நடிப்புக்கு வருவதற்கு முன்னதாக சுமார் 6 வருடங்கள் நடன கலைஞராக பணியாற்றினார். அதன் பிறகு கிடைத்த ஒரு வரம் தான் இந்த சீரியல். சித்துக்கு ஜோடியாக நடித்த ஸ்ரேயா தன் இயல்பான நடிப்பால் மக்களிடையே அதிகளவு ரீச் ஆகினார்.

பிறகு நாட்கள் கடக்க, இருவரது ஜோடி பொருத்தமும் ரசிகர்கள் மத்தியில் வேற லெவல் ஹிட் கொடுத்தது. சீரியல் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் சித்து & ஸ்ரேயா காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண வீடியோக்கள் எல்லாம் சமூக வலைத்தளங்களை நிரப்பி அதிகளவு வைரலை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். இதையடுத்து தற்போது சித்து விஜய் டிவி ராஜா ராணி 2விலும் ஹீரோவாக மாஸ் காட்டி வருகிறார். மேலும், சித்து மற்றும் ஸ்ரேயா இருவரும் அதிக அளவில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக உள்ளவர்கள்.

அதுமட்டுமல்லாமல் இவர்களுக்கென ஒரு யூடியூப் சேனல் ஒன்றும் இருக்கிறது. அதில் சித்து கல்யாணத்திற்கு பிறகு தன் மனைவி ஷ்ரேயாவுடன் எடுத்துக்கொள்ளும் க்யூட் ரீல்ஸ் வீடியோ மற்றும் பெஸ்ட் மோமெண்டுகளை ரசிகர்களுக்காக ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வருகிறார்கள். இந்த நிலையில் ஸ்ரேயா சித்துவுக்காக விலையுயர்ந்த ஆப்பிள் லேப்டாப் ஒன்றை கிப்ட் கொடுத்துள்ளார். இந்த ஜோடி ஆலியா – சஞ்சீவ் ஜோடிக்கே டப் கொடுக்கும் அளவிற்கு ட்ரெண்ட்டாகி வருகின்றனர். நீங்களே பாருங்க அந்த க்யூட்டான வீடியோவை..,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here