தோனி தலைமைக்கு பிறகு உலக கோப்பை கனவு அவ்வளவுதானா?? விராட் கோஹ்லி அதிரடியாக விளையாடியும் ரசிகர்கள் ஏமாற்றம்!!

0
தோனி தலைமைக்கு பிறகு உலக கோப்பை கனவு அவ்வளவுதானா?? விராட் கோஹ்லி அதிரடியாக விளையாடியும் ரசிகர்கள் ஏமாற்றம்!!
தோனி தலைமைக்கு பிறகு உலக கோப்பை கனவு அவ்வளவுதானா?? விராட் கோஹ்லி அதிரடியாக விளையாடியும் ரசிகர்கள் ஏமாற்றம்!!

தோனி தலைமைக்கு பிறகு இந்திய அணி ஒரு உலக கோப்பையையும் வெல்லாதது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையை அளித்து வருகிறது.

டி20 உலக கோப்பை:

இந்திய அணி நடப்பு டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் தென் ஆப்பிரிக்காவிடம் மட்டும் தோல்வியை சந்தித்து, மற்ற 4 அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியது. ஆனால், இந்த அரையிறுதி போட்டியில் இங்கிலாந்திடம் மோசமான தோல்வியை சந்தித்து, நாடு திரும்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ISL 2022: ஏடிகே மோகன் பகான் அணி அசத்தல் வெற்றி…, புள்ளி பட்டியலில் ஏற்பட்ட மாற்றம்??

இந்த உலக கோப்பையில், இந்திய அணி அரையிறுதியுடன் முடித்து கொண்டாலும், ரசிகர்களுக்கு ஆறுதல் அளிப்பது விராட் கோஹ்லியின் ரெகார்ட் மட்டும் தான். அதாவது, நடப்பு உலக கோப்பையில், இந்திய அணி விளையாடிய 6 போட்டிகளில், இவர், 4 போட்டிகளில் அரைசதம் (82, 62, 64, 50) அடித்து 296 ரன்களை குவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதே போல, 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் மொத்தமாக 319 ரன்கள் மற்றும் 2016 யில் 273 ரன்கள் என அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இடம் பிடித்திருந்தார். இவர் ஒருவர் உலக கோப்பையை வெல்ல தன்னால் ஆன முயற்சிகள் அனைத்தையும் செய்திருந்தார். ஆனாலும், இந்திய அணி 2014, 2016 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் உலக கோப்பையை நெருக்கிய போதும் அதை அடைய தவறியது. கடந்த 2007 ஆம் ஆண்டு தோனி தலைக்கு பிறகு இந்திய அணி மீண்டும் எப்போது டி20 உலக கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் நிலவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here