ஆடை சர்ச்சை விவகாரம் .., வீடியோவில் பேசியது எல்லாம் பொய்.., நடிகர் சதீஷ்க்கு ரிவிட் அடித்த தர்ஷா குப்தா!!

0
ஆடை சர்ச்சை விவகாரம் .., வீடியோவில் பேசியது எல்லாம் பொய்.., நடிகர் சதீஷ்க்கு ரிவிட் அடித்த தர்ஷா குப்தா!!
ஆடை சர்ச்சை விவகாரம் .., வீடியோவில் பேசியது எல்லாம் பொய்.., நடிகர் சதீஷ்க்கு ரிவிட் அடித்த தர்ஷா குப்தா!!

ஆடை சர்ச்சை விவகாரம் குறித்து நடிகர் சதீஷ் விளக்கமளித்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை தர்ஷா குப்தா ட்விட்டரில் ட்விட் செய்துள்ளார்.

ஆடை சர்ச்சை:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை தர்ஷா குப்தா. தற்போது இவர் நடிப்பில் உருவான ஓ மை ஹோஸ்ட், மெடிக்கல் மிராக்கல் என்ற திரைப்படங்கள் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் ஓ மை ஹோஸ்ட் படத்தின் இசை வெளியிட்டு விழா கோலாகலமாக நடந்தது. அப்போது நடிகர் சதீஷ், தர்ஷா குப்தாவின் ஆடையை குறித்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இவர் பேசியதற்கு பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து நடிகர் சதீஷ், தர்ஷா குப்தா தான் மேடையில் ஆடை குறித்து பேச சொன்னார் என்று ஒரு வீடியோ மூலம் தெரிவித்து சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். நடிகர் சதீஷின் இந்த வீடியோ பதிவிற்கு, தர்ஷா குப்தா தனது டுவிட்டர் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதாவது தர்ஷா குப்தா கூறியதாவது, நடிகர் சதீஷ் என்னை அடிமை படுத்துவதற்கு இது ஒரு நல்ல வழியாக பயன்படுத்திக் கொண்டார். நான் அவரை மேடையில் ஆடை குறித்து பேச சொன்னேன் என்று சொல்வது அப்பட்டமான பொய்.

அடிச்சான் பாரு உன் EX.., பிக் பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுக்கும் ரக்ஷிதா முன்னாள் கணவர்.., ராபர்ட் மாஸ்டருக்கு சரியான ஆப்பு!!

அவர் வீடியோவில் பேசியது எனக்கு மிகவும் வேடிக்கையாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். மேலும் யாராவது மேடையில் தன்னை பற்றி இழிவாக பேசுங்கள் என்று சொல்லுவாங்களா? . அவர் அன்று மேடையில் என் ஆடையை பற்றி பேசும் போது எனக்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் அதை அப்போது பெரிதாக காட்டி கொள்ளவில்லை. ஆனால் தற்போது சதீஷ் வீடியோவில் பொய்யான கருத்துக்களை பதிவிட்டு வருவது நல்லதுக்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here