இலங்கைக்கு எதிரான வெற்றியை கொண்டாடிய விராட் கோலி, இஷான் கிஷன்…, வைரலாகும் வீடியோ பதிவு!!

0
இலங்கைக்கு எதிரான வெற்றியை கொண்டாடிய விராட் கோலி, இஷான் கிஷன்..., வைரலாகும் வீடியோ பதிவு!!
இலங்கைக்கு எதிரான வெற்றியை கொண்டாடிய விராட் கோலி, இஷான் கிஷன்..., வைரலாகும் வீடியோ பதிவு!!

இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி, 2வது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில், முதலில் பேட் செய்த இந்திய அணி, 215 ரன்களுக்களுக்குள் சுருண்டது. 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய, இந்திய அணியில், 14 ஓவரிலேயே 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி இருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையடுத்து, கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வீரர்களின் அதிரடியால் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டியானது, கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இரவு நேரத்தில் நடந்து முடிந்த இந்த போட்டியில், மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் இஷான் கிஷன் ஒன்றை செய்துள்ளனர்.

“5 வது இடத்தில் களமிறங்க ரோஹித் தான் விரும்பினார்”…, பேட்டிங் குறித்து கே எல் ராகுல் ஓபன் டாக்!!

அதாவது, ஈடன் கார்டன்ஸ் மைதானமானது, இரவு நேரத்தில், டிஸ்க்கோ லைட்களால் அலங்கரிக்கப்பட்டது போல் காட்சி அளித்திருந்தது. இந்த நேரத்தை பயன்படுத்திய விராட் கோலியும், இஷான் கிஷனும் ரசிகர்கள் மத்தியில் டான்ஸ் ஆடி உள்ளனர். இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here