ரசிகர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்.., மீண்டும் நேருக்கு நேர் மோதும் அஜித், விஜய் திரைப்படங்கள்!!!

0
ரசிகர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்.., மீண்டும் நேருக்கு நேர் மோதும் அஜித், விஜய் திரைப்படங்கள்!!!
ரசிகர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்.., மீண்டும் நேருக்கு நேர் மோதும் அஜித், விஜய் திரைப்படங்கள்!!!

நடிகர் விஜய் மற்றும் அஜித் நடித்த வாரிசு, துணிவு படம் ஒரே நாளில் வெளியான நிலையில் இவர்களின் அடுத்த திரைப்படங்கள் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

தளபதி 67 vs ஏகே 62:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் உச்சகட்ட நட்சத்திரமாக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் மற்றும் அஜித். சமீபத்தில் அவர்கள் நடித்த வாரிசு மற்றும் துணிவு ஒரே நாளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் 8 வருடங்களுக்கு பிறகு இரண்டு மிகப்பெரிய நடிகர்களின் படங்கள் மோதி கொண்டதால் இருதரப்பு ரசிகர்களால் திரையரங்குகள் மட்டுமின்றி பொதுசொத்துக்களும் அதிகம் சேதமடைந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் படைப்பில் உருவாகி வரும் தளபதி 67 படத்திலும், நடிகர் அஜித் விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் ஏகே 62 படத்திலும் நடிக்க இருக்கிறார்கள். மேலும் தளபதி 67 படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது. அஜித்தின் ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி 17ம் தேதி தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த இரண்டு படங்கள் குறித்து இணையத்தில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

விஜய்யின் வாரிசு ட்ரிகை காப்பியடிக்கும் தனுஷ்., அடுத்த படத்தின் கதை இதுதான்? அதுல இவங்க இருக்காங்க?

லோகேஷ்- விஜய் கூட்டணியில் உருவாகும் தளபதி 67 மற்றும் விக்னேஷ் சிவன் – அஜித் கூட்டணியில் தயாராகும் ஏகே 62 திரைப்படங்கள் வருகிற தீபாவளி ரேஸில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது தீபாவளி அன்று இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாக இருப்பதாக சோசியல் மீடியாவில் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது. இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here