“5 வது இடத்தில் களமிறங்க ரோஹித் தான் விரும்பினார்”…, பேட்டிங் குறித்து கே எல் ராகுல் ஓபன் டாக்!!

0
"5 வது இடத்தில் களமிறங்க ரோஹித் தான் விரும்பினார்"..., பேட்டிங் குறித்து கே எல் ராகுல் ஓபன் டாக்!!

இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணியின் கே எல் ராகுல் 5 வது இடத்தில் களமிறங்கி விளையாடியதை குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

கே எல் ராகுல்:

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டியில், நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில், முதலில் பேட் செய்த இலங்கை அணி, இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் 215 ரன்களுக்குள் சுருண்டது. இதில், குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் தல மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த இலக்கை துரத்திய இந்திய அணி 43.2 ஓவரிலேயே 219 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. எப்போதும் தொடக்க வீரராக களமிறங்கும் கே எல் ராகுல் இந்த போட்டியில், 5 வது வீரராக களமிறங்கி அரைசதம் (64*) கடந்து அசத்திருந்தார். இந்நிலையில், இந்த போட்டி குறித்து, கே எல் ராகுல் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

IND vs NZ T20: இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்து படை அறிவுப்பு…, கேப்டனை மாற்றிய அணி நிர்வாகம்!!

அவர் கூறியதாவது, கேப்டன் ரோஹித் சர்மா என்னை 5வது இடத்தில் களமிறங்க விரும்புவதாக கூறினார். நான் அதை முயற்சித்தேன் என்று கே எல் ராகுல் கூறியுள்ளார். மேலும், இந்த 5 வது இடத்தில், ஒருநாள் போட்டிகளில் பேட் செய்வதன் மூலம், அவசரப்படாமல் நிதானமாக விளையாடுவதுடன் அணியின் தேவை புரிந்து விளையாடும் சூழல் அமைத்தது என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here