“எங்கள் இலக்கை அடைய முடியவில்லை”…, RCB குறித்து விராட் கோலி வெளியிட்ட உருக்க பதிவு!!

0
"எங்கள் இலக்கை அடைய முடியவில்லை"..., RCB குறித்து விராட் கோலி வெளியிட்ட உருக்க பதிவு!!

நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் தொடரில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK ) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணிகள் இருந்தன. இதில், CSK ரசிகர்கள் தோனிக்காகவும், RCB ரசிகர்கள் விராட் கோலி அணியினர் இந்த முறையாவது கோப்பையை வெல்லமாட்டார்களா? என்ற எதிர்பார்ப்புடனும் இருந்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும், CSK ரசிகர்கள் கூட பலர் RCB அணி இந்த முறையாவது சாம்பியன் பட்டத்தை வென்றால் எங்களுக்கு சந்தோசம் தான் என கூறிவந்தனர். இதற்கு காரணம், ஐபிஎல் வரலாற்றில் கடந்த 15 சீசனிலும் பங்கு பெற்ற RCB அணி 8 முறை பிளே ஆப் சுற்றுக்கும், அதில் 3 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆனால், ஒரு முறை கூட சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றதே இல்லை என்பதே. தற்போது ஐபிஎல் தொடரின் 16 வது சீசனிலும் மற்ற அணிகளுக்கு எதிராக கடுமையாக போராடிய போதும், லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனால், RCB ரசிகர்கள் மீண்டும் பெரும் ஏமாற்றத்தையும் அடைந்துள்ளனர்.

உலக அளவில் நம்பர் 1. வீரரான நீரஜ் சோப்ரா…, முதல் இந்தியர் என சரித்திரம் படைப்பு!!

இந்நிலையில், RCB அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில போட்டோக்களை பகிர்ந்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, ஐபிஎல் 16 மறக்க முடியாத பல தருணங்களைக் கொண்ட சீசனாக அமைத்தது. ஆனால், எங்களால் (RCB) இலக்கை அடைய முடியவில்லை. இருப்பினும் தொடர்ந்து, ஆதரவுகளை கொடுத்த ரசிகர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகம் மற்றும் எனது அணியினருக்கு நன்றி என பதிவிட்டுள்ளார். மேலும், மீண்டும் நாங்கள் (RCB) வலுவாக திரும்புவதை நோக்கமாக கொண்டுள்ளதாக “THANK YOU BENGALURU” என பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Virat Kohli (@virat.kohli)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here