உலக அளவில் நம்பர் 1. வீரரான நீரஜ் சோப்ரா…, முதல் இந்தியர் என சரித்திரம் படைப்பு!!

0
உலக அளவில் நம்பர் 1. வீரரான நீரஜ் சோப்ரா..., முதல் இந்தியர் என சரித்திரம் படைப்பு!!
உலக அளவில் நம்பர் 1. வீரரான நீரஜ் சோப்ரா..., முதல் இந்தியர் என சரித்திரம் படைப்பு!!

இந்தியாவின் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று நாட்டையே பெருமைப்படுத்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, இந்த ஆண்டுக்கான முதல் டயமண்ட் லீக் தொடரில் கலந்து கொண்டார். இம்மாத தொடக்கத்தில், கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற இந்த போட்டியில், தனது முதல் முயற்சியிலேயே 88.67மீ தூரம் ஈட்டி எறிந்ததன் மூலம், தங்கப்பதக்கத்தையும் தட்டி சென்றார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதற்கு முன் கடந்த ஆண்டு நடைபெற்ற, லொசேன் டயமண்ட் லீக் தொடரிலும் பல வெற்றிகளை குவித்து சாம்பியன் (தங்கம்) பட்டத்தையும் வென்று அசத்தி இருந்தார். இந்த தொடர் வெற்றிகளை பெற்று சர்வதேச அளவில் இந்தியாவை பெருமையைப்படுத்தியதுடன் இளம் வீரர்கள் பலரை ஊக்கப்படுத்தியும் வருகிறார்.

CSK vs GT: குருவை (தோனி) எதிர்கொள்ளும் சிஷ்யன் (ஹர்திக் பாண்டியா)…, இறுதிப் போட்டிக்கு முன்னேறப்போவது யார்??

இந்நிலையில், சர்வதேச ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தரவரிசை வெளிப்படப்பட்டது. இதில், நீரஜ் சோப்ரா 1455 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்த முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார். இந்த பட்டியலில் நடப்பு உலக சாம்பியனான ஆண்டர்சன் பீட்டர்ஸ் 1433 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார். மேலும், இந்திய வீரர்களான ரோஹித் யாதவ் 1195 மற்றும் DP மனு 1185 புள்ளிகளுடன் 15 மற்றும் 17 வது இடத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here