உலக கோப்பை இறுதி போட்டியில் விராட் கோலியின் வைரல் நடனம்… ரசிகர்களை குஷிப்படுத்திய வீடியோ உள்ளே!!!

0

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் மூன்றாம் நாளான நேற்று மைதானத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களால் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

இந்தியா – நியூசிலாந்து இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தற்போது நடைபெற்றுவருகிறது. முதல் நாள் ஆட்டம் மழையால் தடைபட்டது. பின்னர் இரண்டாம் நாள் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் கோலி 44 ரன்களும், ரஹானே 29 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

நேற்று நடந்த மூன்றாம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கியது. அதில் 217 ரன்களுக்கு இந்தியா எல்லா விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் நியூஸுலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. நேற்றைய ஆட்டநேர முடிவில் 102 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை அந்த அணி இழந்திருந்தது.

இந்நிலையில் இந்தியா – நியூசிலாந்து இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நேற்று நடந்த ஆட்டத்தில் மைதானத்தில் பஞ்சாபி பாடல் ஒன்றிற்கு விராட் கோலி நடனம் ஆடினார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ:

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here