சர்வதேச யோகா தினம்.. குறிப்பிட்ட திருக்குறளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி உரை!!

0

இன்று ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்த யோகா தினத்தை முன்னிட்டு நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் உரை நிகழ்த்தியுள்ளார். அவரின் உரையில்,’நோய் நாடி’ என தொடங்கும்  திருக்குறளை மேற்கோள் காட்டி உள்ளார்.

கொரோனா நோய் தொற்று பாதிப்பை குறைக்கும் செயல் முறைகளில் ஒன்றாக விளங்குவது தான் இந்த யோகக்கலை. இந்த யோகா தினமானது கடந்த 2015-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று 7-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இது குறித்து பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அந்த உரையில் அவர் யோகாவின் சிறப்புக்களை எடுத்துக் கூறியுள்ளார். மேலும், இந்த ஆண்டின் கருப்பொருளாக அவர் முன்வைப்பது, ‛ஆரோக்கியத்திற்கு யோகா’ என்பதே ஆகும்.

 

அவர் கூறியதாவது,இந்த யோகா எதிர்மறை சக்தியுடன் போராட உதவுகிறது. இதன் அடிப்படை நோக்கம் உடல் மற்றும் மன நலம் ஆகும். மேலும் இந்த கொரோனா காலத்தை  யோகா பயிற்சிகள் மூலம் எதிர்க்கொள்ளலாம் என பல மருத்துவ நிபுணர்களும் இந்த முறைக்கு முக்கியத்துவம் தருகின்றனர் என மோடி கூறியுள்ளார். கொரோனாவால் ஏற்படும் சுவாசம் குறித்த பிரச்சனைக்கு உதவும் பேராயுதமாக யோகா உள்ளதாகவும், நமக்கு  உள் வலிமையை சேர்ப்பதாகவும் உள்ளது என தெரிவித்து உள்ளார்.

அவர் உரையில், கொரோனா  தொற்று நேரத்தில் யோகா பயிற்சிகள் மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஒளியாக விளங்குகிறது எனவும் கூறியுள்ளார். மேலும்  ‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’ என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி தனது உரையை நிகழ்த்தி உள்ளார். அதாவது, நோய் என்ன, அதற்கான காரணம் என்ன,அதை  தீர்க்கும் வழி என்ன போன்றவற்றை ஆராய்ந்து அறிந்து அதற்கான சிகிச்சையில் ஈடுபட வேண்டும் என்பதே இந்த குரலின் பொருளாகும். இவ்வாறு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அவர்கள் உரையாற்றி உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here