ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள்: தமிழகத்தில் இன்று முதல் அமல்!!!

0

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் பல்வேறு சேவைகள் மற்றும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அதன் தொற்று குறைந்த நிலையில் சில தளர்வுகளை மாநில அரசு அறிவித்தது. அந்த தளர்வுகள் இன்று முதல் தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது

கொரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலையை தடுக்கும் வகையில் பல்வேறு யுக்திகள் அரசு கையாண்டு உள்ளது. அதன் ஒரு முயற்சி தான் இந்த ஊரடங்கு. கடந்த மாதத்தின் தொடக்கத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, தொற்றின் வீரியத்தை கணக்கில் கொண்டு அது மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டது.அந்த வகையில், இன்று காலையுடன் முடிவடைய இருந்த ஊரடங்கில் தமிழக அரசு மேலும் சில தளர்வுகளை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. அதாவது சில  நகரங்களில் பேருந்துகள் இயக்கம், கடைகளின் திறப்பு நேரம் அதிகரிப்பு உட்பட பல தளர்வுகளை அறிவித்தது.

அதாவது மளிகை,பலசரக்கு,இறைச்சி,மீன் கடைகள்,காய்கறி,பூ விற்பனை போன்றவை காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படலாம். உணவகங்களில் பார்சல் சேவைகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அதே போல இதர மின் சேவை நிறுவனங்கள்,இனிப்பு,கார வகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 9 மணி வரை செயல்பட அனுமதி. அரசின் அத்தியாவசிய அலுவலகங்களில் 100%, மற்ற அரசு அலுவலகங்களில் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதி, அனைத்து தனியார் துறையும் 33% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி. மின் பொருட்கள்,ஹார்டுவேர் கடைகள்,வாகன உதிரி பாகங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்,கல்வி சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்கும் கடைகள் உட்பட பலவற்றிற்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை பணிகளுக்கு அரசு அனுமதித்து உள்ளது.


மேலும், சென்னை,செங்கல்பட்டு,காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற நகரங்களில் 100 சதவீத பேருந்துகள் இயக்க அரசு உத்தரவிட்டு உள்ளது.மேலும் இந்த பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிகளை அனுமதிக்க வேண்டும்,குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் இயக்க தடை தொடரும் எனவும் அறிவித்துள்ளது. இன்று முதல் இந்த தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன. தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு, பேருந்துகள் இயக்கபட்டாலும் பயணிகள் வரத்து மிக குறைந்த அளவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here