தோனியின் சாதனையை முறியடித்த விராட் கோலி… அப்படி என்ன சாதனை தெரியுமா??

0

தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆன விராட் கோஹ்லி முன்னாள் கேப்டனான தோனியின் ஒரு சாதனையை முறியடித்துள்ளார். அது என்ன சாதனை என்று இங்கே பார்க்கலாம்.

சௌதாம்ப்டனில் இந்தியா, நியூசிலாந்து ஆகிய இரு வலுமிக்க அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெற்று வருகிறது.  இந்த போட்டி கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட ஒன்று. இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலிக்கு இது 61-வது டெஸ்ட் ஆட்டம். இதன்மூலம், அதிக டெஸ்ட் ஆட்டங்களில் இந்திய அணியை வழிநடத்திய கேப்டன் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

அதிக டெஸ்ட் போட்டியை வழி நடத்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் க்ரீம் ஸ்மித். இவர் 109 டெஸ்ட் ஆட்டங்களில் கேப்டனாக இருந்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் 93 டெஸ்ட் ஆட்டங்களில் கேப்டனாக இருந்துள்ளார்.

MS தோனி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து 2014 ஆம் ஆண்டு விலகுவதாக அறிவித்தார். அப்போது வரை அவர் 60 டெஸ்ட் ஆட்டங்களில் இந்திய அணியின் கேப்டனாக இருந்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியை  விராட் கோலி வழிநடத்துவதால் மொத்தமாக 61 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக பங்கேற்று இந்த சாதனையை கோலி தற்போது முந்தியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here