கும்கி நடிகர் விக்ரம் பிரபுவின் மனைவியா இது?? முன்னணி ஹீரோயினுக்கே டஃப் கொடுப்பார் போலையே!!!

0

தமிழ் சினிமா உலகில் ஒரு பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரபு. அவரின் மகனும் தற்போது திரையில் ஒரு பிரபல நடிகருமாக இருப்பவர் விக்ரம் பிரபு. இந்நிலையில் இவர் தன்னுடைய மனைவியுடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் திலகம் சிவாஜியின் பேரன், முன்னணி நடிகர் பிரபுவின் மகன் என்ற மிகப்பெரிய அடையாளத்துடன் சினிமாவுக்குள் வந்தவர் விக்ரம் பிரபு. அதாவது 2012 ஆம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி படத்தின் மூலம் திரைக்கு வந்தார். அதுவே அவருக்கு தமிழிலும் முதல் படமாகும். அந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வர தொடங்கியது. அந்த வகையில் இவர் இவன் வேற மாதிரி, சிகரம் தொடு, இது என்ன மாயம், வாகா, உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்த படங்கள் எதுவும் அந்த அளவுக்கு பேச படவில்லை. இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. அதன் பின்னர் சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு புலிக்குத்தி பாண்டி என்ற படம் நேரடியாக டிவியில் வெளியாகியது.

இந்த படம் அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்று தந்தது. இதை தொடர்ந்து இவர் பொன்னியின் செல்வன், பாயும் ஒளி நீ எனக்கு என்ற இரு படங்களில் நடித்து வருகிறார். எனினும் அவரால் தன் தந்தை மற்றும் தாத்தா போன்று திரைதுரையில் ஜொலிக்க முடியவில்லை. இந்நிலையில் தற்போது விக்ரம் பிரபு தன் மனைவி லட்சுமி உஜினி உடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. மேலும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here