இந்தியாவில் குறைகிறதா கொரோனா பரவல்?? – ஒரே நாளில் 36,385 பேர் டிஸ்சார்ஜ்!!

0

மத்திய சுகாதரத்துறை தகவலின் படி இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 42,618 பேருக்கு கொரோனா  தொற்று ஏற்பட்டுள்ளதாகவும்,  330 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 36,385 குணமடைந்ததாக கூறப்பட்டுள்ளது.

கொரோனாவின் இன்றைய நிலவரம்:

இந்தியாவில் கொரோனா நோயின் முதல் அலையில் பெரும்பாதிப்பு உருவாகி முழுமையாக கட்டுக்குள் கொண்டு வருதற்குள் இரண்டாம் அலையின் பாதிப்பு பரவ தொடங்கியது. இதில் இந்தியாவில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3.29 கோடியை தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கத்து. மேலும் இந்த பெருந்தோற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணைக்கையானது 4.40 லட்சத்தை நெறுங்கியுள்ளது.


இந்தியாவில் கொரோனாவினால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெருவோரின் எண்ணிக்கையானது 4,05,681 பேர் ஆகும்.  மேலும் இதில் மகிழ்ச்சித்தரும் நிகழ்வாக அமையும் விஷயம் என்னவென்றால் தற்போதைய நிலவரத்தின் படி இந்நோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் விகிதமானது 97.43% ஆக உயர்ந்துள்ளது என்பது தான். இதனால்  உயிரிழந்தோரின்  விகிதமானது 1.34% ஆக குறைந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறையின் இன்றைய (செப் 4) அறிக்கையின் படி , கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் 42,618 பேர், குணமடைந்தோரின் எண்ணிக்கையானது 36,385 பேர் எனவும், பலியானோர்  330 எனவும் அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி 67,72,11,205 பேருக்கு போடப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here