ஓலா நிறுவனத்தின் புதிய தளம் துவக்கம் – TRY AND BUY என்ற பெயரில் அசத்தல்!!

0

ஓலா நிறுவனம்  பழைய கார்களை வாங்கவும் விற்கவும் புதிய பெயரில் ஒரு தளத்தை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

புதிய விற்பனை தளம்:

நாடு முழுவதும் தங்களது மிக சிறந்த தொழில்நுட்பத்தாலும், வாடிக்கையாளர்களை கவரும் நடவடிக்கைகளாலும் மிக சிறந்த இடத்தை தனியார் நிறுவனமான ஓலா நிறுவனம் பெற்றுள்ளது.  கால நேரத்தை மிச்சப்படுத்தவும், குறிப்பிட்ட நேரத்தில் நினைத்த இடத்திற்கு கூட்ட நெரிசல் இல்லாமல் போய் சேரவும் மக்கள் இந்த வாடகை கார் நிறுவனங்களின் சேவைகளை  பயன்படுத்திக் கொண்டு  வருகின்றனர்.

இந்த வாடகை காரில் கிமீக்கு என்று வாடிக்கையாளர்களிடம் குறிப்பிட்ட அளவு பணம் பெறப்படும்.  ஆனால், துரித நேரத்தில் இந்த சேவை கிடைத்துவிடும் என்பது நாம் அறிந்த ஒன்று. இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த நிறுவனம் 150நகரங்களில் ஓலா பைக் சேவையை தொடங்கி விரிவாக்கம் செய்தது.

 

இதற்காக,  3 லட்சம் பேருடன் களம் இறங்கி, இதன் மூலம் வேலைவாய்ப்பை பெருக்க முழு முயற்சியையும் எடுத்து வருவதாக ஓலா நிறுவனம்  தெரிவித்து இருந்தது. தற்போது, மற்றொரு புதிய விற்பனை தளத்தை  விரைவில் ஓலா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது, பழைய கார்களை வாங்கவும் விற்கவும் try and buy என்ற புதிய பெயரில் தளத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.

மேலும், ஒரு வருட வாரண்டி மற்றும் இ எம் ஐ என்ற கூடுதல் சிறப்பம்சங்களும் இதில் இடம் பெற உள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதனால், இது ஓலா வாடிக்கையாளர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here