சினிமாவை விட்டு வெளியேறும் சியான் விக்ரம்..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

0

விக்ரம் 1990 ஆண்டு வந்த “என் காதல் கண்மணி” என்னும் படத்தின் மூலம் திரைஉலகிற்குள் காலடி எடுத்து வைத்தார், அதன் பின் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட படங்களில் நடித்து வந்தார். இவர் நடிக்க தொடங்கி ஒன்பது ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த சேது என்னும் படத்தின் மூலம் திரையுலக ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார் விக்ரம்.

விக்ரம் மகன் துருவ்:

சேது படமே இவரின் திரை வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றது. இந்த வெற்றிக்குப் பின் தில், ஜெமினி, தூள், சாமி போன்ற படங்களில் நடித்தார். இவர் காசி எனும் படத்தில் பார்வை அற்றவராக நடித்து திரை விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றார். பின்னர் பிதாமகன் படத்தில் வெட்டியான் கதாப்பாத்திரத்தை தத்ரூபமாக நடித்து தேசிய விருது பெற்றார் விக்ரம்

துருவ் (Dhruv) விக்ரமின் மகன் ஆவார்,இவரின் முதல் படம் ஆதித்யா வர்மா ஆகும்,தனது முதல் படத்திலேயே நல்ல மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார் தற்போது இவர் பாலாவின் இயக்கி வரும் வர்மா எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

விக்ரமின் கோப்ரா

விக்ரம் கடைசியாக கமல் தயாரிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் வந்த கடாரம் கொண்டான் என்னும் படத்தில் நடித்தார்.கலவையான விமர்சனங்களைப் வந்தபோதும் விக்ரமின் நடிப்பு இப்படத்தில் பாராட்டப்பட்டது. இப்படத்தை தொடர்ந்து, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் கோப்ரா படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம்.

சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தப் படத்தில் கே.ஜி.எஃப் படத்தின் நாயகி ஆன ஸ்ரீநிதி ஷெட்டி கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தற்போது கொரோனா வைரஸ் தொற்றால், ரஷ்யாவில் நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விக்ரம் இப்படம் மட்டுமில்லாமல், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்

விக்ரம் திரையுலகை விட்டு விலகலா?

இந்நிலையில் தனது மகன் துருவ்வின் வளர்ச்சிக்காகவும் அவரை கண்காணித்து வழிநடத்த போவதாக எனவே  நடிகர் விக்ரம் சினிமாவிலிருந்து விலகப் போகிறார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்தச் செய்தியைப் பலரும் பகிர்ந்து வந்தார்கள்.இது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியளித்துள்ளது. திரையுலகை விட்டு விலகுவதாக வெளியான செய்திக்கு விக்ரம் தரப்பு விளக்கம் மறுத்து விளக்கம் அளித்துள்ளது. இதற்கு விக்ரம் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விக்ரம் தரப்பிலிருந்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், “இது பொய்யான செய்தி. எப்படி யாரிடமும் உறுதிப்படுத்தாமல் இப்படியொரு செய்தி வெளியிடுகிறார்கள் என்று தெரியவில்லை. இது போன்ற செய்திகளைப் பதிப்பிக்கும் முன் கேட்கவும்.தனது வாழ்க்கையை தனது கலைக்காக அர்ப்பணித்திருப்பதை ஒவ்வொருவரும் நன்கு அறிவர். ‘கோப்ரா’, ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் லலித் குமார் தயாரிக்கவுள்ள மற்றொரு படம் உள்ளிட்ட சில படங்களில் விக்ரம் பணியாற்றி வருகிறார். உலகளாவிய பேரழிவைப் பற்றி மக்கள் ஏற்கனவே பீதியில் இருக்கும் நேரத்தில் இதுபோன்ற அறிக்கைகள் பொறுப்பற்றவை மற்றும் கண்டிக்கத்தக்கவை” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here