படப்பிடிப்பை மோதலில் ஆரம்பித்த விக்ரம், துருவ் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்போடு தயாராகவுள்ளது நடிகர் விக்ரமின் 60ஆவது திரைப்படம். சமீபத்தில் துவங்கிய படப்பிடிப்பின் ஆரம்பத்திலேயே விக்ரம் மற்றும் துருவ் மோதும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம்.

விக்ரம் 60

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் 60 ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியுள்ளது. முன்னதாக விக்ரம் நடித்து வரும் ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்ற விக்ரம் இந்தியா திரும்பியுள்ளார். தற்போது நடந்து வரும் விக்ரம் 60 படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் விக்ரம். ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் துருவ் விக்ரம் நடித்து வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த காம்போவை காண ரசிகர்கள் மத்தியில் இப்போதே ஆவல் அதிகரித்துள்ளது. விக்ரம், துருவுடன் இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் நடித்து வருகின்றனர். முன்னதாக இசையமைப்பாளர் அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கவிருந்தார். சில காரணங்களுக்காக இப்படத்திலிருந்து அனிருத் நீக்கப்பட்டு, தற்போது சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

ஓ இப்படி தான் நீங்க பிட்டாக இருக்கீங்களா – வைரலாகும் ஐஸ்வர்யா மேனனின் வீடியோ!!

இந்நிலையில் தற்போது வெளிவந்த தகவலின் படி இப்படத்தின் முதல் காட்சியே சண்டையுடன் தான் துவங்கவுள்ளதாம். அதாவது விக்ரம் – துருவ் இருவரும் மோதும் சண்டை காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறதாம். அப்பா மகன் மோதும் சண்டை காட்சிகளை திரையில் காண்பதற்கு விக்ரமின் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here