கூல் சுரேஷை காப்பி அடிக்கும் விஜய் பட நடிகை.., சிம்புவிடம் வைத்த முக்கிய கோரிக்கை!!!

0
கூல் சுரேஷை காப்பி அடிக்கும் விஜய் பட நடிகை.., சிம்புவிடம் வைத்த முக்கிய கோரிக்கை!!!
கூல் சுரேஷை காப்பி அடிக்கும் விஜய் பட நடிகை.., சிம்புவிடம் வைத்த முக்கிய கோரிக்கை!!!

அண்மையில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிம்பு T. R நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ ஏக போக வெற்றியை தழுவியது. மேலும் சிம்புவின் தீவிர ரசிகரும், காமெடி நடிகருமான கூல் சுரேஷ், ‘வெந்து தணிந்தது காடு’ படம் திரைக்கு வருவதற்கு முன்பு 2 மாதங்களாக இப்படத்தின் புரமோஷன் வேலைகளை செய்து வந்தார். மேலும் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும், அங்கு ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை வைத்தே கூல் சுரேஷ் பஞ்ச் வசனம் பேசி வந்தார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதனால் “வெந்து தணிந்தது காடு’ படம் திரைக்கு வருவதற்கு முன்பே பார்வையாளர்கள் மத்தியில் செம்ம ரீச் ஆகி விட்டது. மேலும் படம் வெளியான பிறகு அதிகமான விமர்சனங்கள் வந்ததை அடுத்து, கூல் சுரேஷ் உருக்கமான வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் இந்த விடியோவை குறிப்பிட்டு, ப்ரண்ட்ஸ் பட நடிகை விஜயலட்சுமி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது தனது அக்காவின் மகள் தற்போது நடிகர் சிம்புவின் வீட்டின் அருகில் இருக்கும் ஜெயப்ரதாவின் இல்லத்தில் தான் இருக்கின்றார்.

நடிகர் சங்கம் எதுக்கு இருக்கு? இவ்ளோ நடந்தும் கண்டுக்கல – முன்னணி பிரபலங்களுக்கு குவியும் கண்டனம்!!

எனது அக்காவிற்கு உடம்பு சரியில்லாததால் குழந்தையை சரியாக பார்த்து கொள்ள முடியவில்லை. எனவே என் அக்கா மகளுக்கு, நடிகர் சிம்பு ஏதேனும் உதவி செய்தால் நன்றாக இருக்கும். அவ்வாறு சிம்பு உதவி செய்தால் கூல் சுரேஷை விட பத்து மடங்கு சிம்புவிற்காக குரல் கொடுப்பேன் என்று விஜயலட்சுமி குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here