விஜய் டிவி நிகழ்ச்சியில் திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த சித்ரா வருங்கால கணவர் – பட்டையை கிளப்பிய ப்ரோமோ!!

0
vijay tv
vijay tv

தற்போது விஜய் டிவி டாப் ரேட்டிங் போயிக்கொண்டுள்ளது என்றே சொல்லலாம். ஏனெனில் பாரதி கண்ணம்மா மற்றொரு பக்கம் பிக் பாஸ் என பிரபலமாக ஒளிபரப்பாகிக்கொண்டுள்ளது. தற்போது ஆயுத பூஜையை முன்னிட்டு கிராமத்து கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

கிராமத்து கொண்டாட்டம்

விஜய் டிவியின் டிஆர்பி கொரோனா காலகட்டத்தில் பின்தங்கி இருந்தது. ஏனெனில் எந்த நிகழ்ச்சி மற்றும் சீரியல்கள் ஒளிபரபகததால் மக்கள் டிவி பார்ப்பதையே நிறுத்தி இருந்தனர். அனைத்து சீரியல்களும் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் மறுஒளிபரப்பு செய்யப்பட்டன. அதன் பிறகு சில தளர்வுகளால் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டதால் மறுபடியும் அனைத்து சீரியல்களும் வழக்கம் போல ஒளிபரப்பாகின.

vijay tv
vijay tv

சீரியல் ஸ்டார்ட் ஆகவே பாரதி கண்ணம்மா, பிக் பாஸ், பாண்டியன் ஸ்டோர்ஸ் என அனைத்து கதைக்களங்களும் ட்ரெண்டிங் ஆனது. இப்பொழுது ஆயுத பூஜையை முன்னிட்டு விஜய் டிவி கிராமத்து கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது. கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினி இதில் கலந்துகொள்கிறார். மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலமான சித்ரா இதில் கலந்துகொள்கிறார்.

 

இதுவரையிலும் போட்டோவில் மட்டுமே பார்த்த சித்ராவின் வருங்கால கணவர் ஹேமந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதில் ஆட்டம் பாட்டம் என இந்த நிகழ்ச்சியில் பட்டையை கிளப்பியுள்ளனர் என்றே சொல்லலாம். மேலும் சித்ரா இந்த அளவிற்கு யாராலும் என்னை விரும்ப முடியாது என்று தனது வருங்கால கணவரை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

vijay tv

மேலும் சித்ரா ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். விஜய் டிவி மேடையிலேயே அவர்கள் இருவருக்கும் நலங்கு வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி வரும் ஞாயிற்று கிழமை மதியம் 3.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here