Wednesday, April 24, 2024

வாட்ஸ்ஆப் வெப்பில் புதிய அப்டேட் – வீடியோ மற்றும் ஆடியோ கால் செய்து கொள்ளலாம்!!

Must Read

அனைத்து தரப்பு மக்களுக்கு பயன்படுத்தும் வலைத்தளமான வாட்ஸ்ஆப் இல் தற்போது மேலும் ஒரு புதிய அப்டேட் வாட்ஸ்ஆப் நிறுவனம் மூலமாக செய்யப்பட உள்ளது. வாட்ஸ்ஆப் வெப் எனப்படும் ஆப்ஷனில் தற்போது வீடியோ மற்றும் ஆடியோ கால் செய்து கொள்ளலாம் என்று புதிய வசதியினை செய்ய வாட்ஸ்ஆப் நிறுவனம் முயற்சித்துள்ளது.

வாட்ஸ்ஆப்:

கடந்த 2009 ஆம் ஆண்டு வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலமாக செய்திகளை இணையத்தின் உதவியுடன் பரிமாறிக்கொள்ளலாம். உலகில் உள்ள அனைத்து மக்களும் தற்போது வாட்ஸ்ஆப்பினை பயன்படுத்துகின்றனர். 2015 ஆம் நடந்த கணக்கெடுப்பின்படி 900 மில்லியன் மக்கள் இந்த செயலியை பயன்படுத்துகின்றனர். எழுத்துகள் கொண்ட செய்திகள் மட்டுமின்றி படம், நிகழ்படம், ஒலிக்கோப்புகள் மற்றும் பயனரின் இருப்பிடத்தை கூட ஷேர் செய்து கொள்ளலாம். இந்த ஆப்பில் வாட்ஸ்ஆப் வெப் எனப்படும் ஒரு வசதியும் உள்ளது.

இன்றைய முக்கியச் செய்திகளின் சுருக்கம் – தவறாம படிங்க!!

அதனை கொண்டு பயனர் வாட்ஸ்ஆப்பை கணினியில் கூட பயன்படுத்தலாம். ஆனால், அதில் வாட்ஸ்ஆப்பில் உள்ள பிற வசதிகளான ஆடியோ கால் மற்றும் வீடியோ கால் செய்யும் வசதிகள் இல்லாமல் இருந்தது. பயனர்களின் தேவையினை கருத்தில் கொண்டு வாட்ஸ்ஆப் நிறுவனம் தற்போது அது போன்ற வசதிகளை வாட்ஸ்ஆப் வெப்பில் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

விரைவில் அப்டேட்:

பீட்டா சோதனையில் இருக்கும் இந்த அப்டேட் விரைவில் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் இதில் போன் காலை நிறுத்துவது, ஆன் செய்வது போன்ற வசதிகளுடன் கூடிய ஒரு புதிய மெனு பட்டனும் உருவாக்கப்பட உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

இந்த புதிய அப்டேட் பலருக்கும் உதவிகரமானதாக இருக்கும் எட்ன்றும் நம்பப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ரயில் பயணிகளே., முன்பதிவு செய்யும் அனைவருக்கும் டிக்கெட் உறுதி? மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!!

இந்தியாவில் ரயில் போக்குவரத்து மேற்கொள்ளும் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் பல முக்கிய வழித்தடங்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் விரைவிலே தீர்ந்து...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -