தேர்தலால் செந்தில், சரவணனுக்கு இடையே வெடித்த பிரச்சனை.,, கவலையில் சிவகாமி.,, ராஜா ராணி சீரியல் அப்டேட்!!

0
தேர்தலால் செந்தில், சரவணனுக்கு இடையே வெடித்த பிரச்சனை.,, கவலையில் சிவகாமி.,, ராஜா ராணி சீரியல் அப்டேட்!!
தேர்தலால் செந்தில், சரவணனுக்கு இடையே வெடித்த பிரச்சனை.,, கவலையில் சிவகாமி.,, ராஜா ராணி சீரியல் அப்டேட்!!

ராஜா ராணி சீரியலில், விறுவிறுப்பை கூட்டும் வண்ணம் அண்ணன், தம்பிக்குள்ளேயே பெரும் பிரச்சனை ஏற்பட்டு, சுவாரசியமாக கதை நகர்ந்து வருகிறது.

சீரியல் அப்டேட்:

ராஜா ராணி சீசன் 2வில், ஒருபுறம் சந்தியா IPS பயிற்சிக்காக சென்னை சென்றுள்ளார், இந்த பக்கம் சரவணன் மற்றும் செந்தில் தென்காசி வியாபாரிகள் சங்க தேர்தலில் போட்டி போடுவதால் குடும்பத்தில் ஒரு புதிய பிரச்சனை வெடித்துள்ளது. இன்றைய எபிசோடில், ஜெசியின் பியூட்டி பார்லர் கடை திறப்பு விழா நடக்கிறது, அதில் சிவகாமி குடும்பத்தினர் மற்றும் ஜெசி குடும்பத்தினர் என அனைவரும் கலந்து கொண்டு உள்ளனர். அப்போது கடையை திறக்க ஆதி , தன்னுடைய அப்பா அம்மாவை கூப்பிடாமல் ஜெஸியின் அப்பாவை அழைத்து கடையை திறந்து வைக்க சொல்ல சொல்கிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதை பார்த்து சிவகாமி மற்றும் அவரது கணவர் ஷாக் ஆகிவிட்டனர்.இதையடுத்து பரந்தாமன் சார்பாக தேர்தலில் நிற்கும் செந்திலுக்கு ஆதரவாக, அவர் ஆட்கள் பேனர் எடுத்து வந்து கோஷங்களை எழுப்பி வர, அர்ச்சனாவுக்கு ஒரே கெத்து தான். இன்னொரு பக்கம் போட்டிக்கு போட்டியாக சரவணனுக்கு ஆதரவாக பேனர் எடுத்து கொண்டு ஆதரவாளர்கள் வருகின்றனர். இதை பார்த்து குடும்பத்தினர் குழப்பத்தில் நின்றனர். அப்போது சரவணன் ஆதரவாளர்கள், உங்க தம்பி ஒரு ஊழல்வாதிக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டு தேர்தலில் நிக்கிறாரு, அவர தேர்தல் இருந்து வாபஸ் வாங்கிக்க சொல்லுக என்று சரவணனிடம் சொல்கிறார்.

வாத்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்.., எப்போது வெளியிடு தெரியுமா?

அதைக்கேட்டு கோபமடைந்த செந்தில், நான் எதுக்கு வாபஸ் வாங்க வேண்டும், வேணும்னா சரவணனை வாபஸ் வாங்க சொல்லுக என்று சொல்ல, சரவணன் நான்லா வாபஸ் வாங்க மாட்டேன் என்று சொல்ல பிரச்சனை ஆரம்பித்து விட்டது. இதனால் குடும்பத்தில் வேற என்னென்ன பிரச்சனையால வர போகுதோ, என்று சிவகாமி கவலைபடுகிறார். இதையடுத்து இனி வரும் எபிசோடுகளில் தரமான சம்பவங்கள் உள்ளது என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here