வாத்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்.., எப்போது வெளியிடு தெரியுமா?

0
வாத்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்.., எப்போது வெளியிடு தெரியுமா?
வாத்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்.., எப்போது வெளியிடு தெரியுமா?

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான வாத்தி திரைப்படம் குறித்து சூப்பர் அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ்:

சினிமாவில் கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என அனைத்து மொழிகளிலும் நடித்து பெயர் போனவர் தான் நடிகர் தனுஷ். கடந்த இரண்டு வருடங்களாக அவரின் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியது ரசிகர்கள் மத்தியில் கவலையை உண்டாக்கியது. எப்போது திரையரங்கில் தனுஷ் முகத்தை பார்ப்போம் என்று ஏக்கத்தில் இருந்த ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாகின.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அது தவிர சம்யுக்தா மேனன், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற “வா வாத்தி” பாடல் அனைத்து ரசிகர்களின் மனதை புரட்டி போட்டது. மேலும் வாத்தி திரைப்படம் அடுத்த மாதம் 2ம் தேதி வெளியாக இருந்த நிலையில், தற்போது தேதி மாற்றியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

என்ன ராபர்ட் மாஸ்டர்.., பல நாள் ஆசையை தீத்துக்கிட்டிங்க.., பாவம் ரக்ஷிதா கணவர்!!

அதாவது இப்படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் இன்னும் முடிவடையாமல் இருக்கிறது. இதனால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன் படி இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17ம் தேதி திரையரங்கில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here