‘உன் ஆசைய நான் நிறைவேற்றுவேன் மாமா’ – உருக்கமான பதிவை பதிவிட்ட புகழ்!!

0

மக்களை தனது நகைச்சுவை மூலம் வயிறு வலிக்க சிரிக்க வைத்து வந்தவர் தான் வடிவேல் பாலாஜி. இவர் கடந்த ஆண்டு உடல் நல குறைவால் மரணமடைந்தார். இன்று வடிவேல் பாலாஜியின் பிறந்தநாள். இதனை தொடர்ந்து புகழ் தனது இன்ஸ்டா பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

வடிவேல் பாலாஜி:

கடந்த 2020ம் ஆண்டு முதல் தற்போது வரை மக்களை கவலைகளை மறந்து சிரிக்க வைத்து வந்த பல நகைச்சுவை நடிகர்களை இழந்து வருகிறது தமிழகம். அந்த வகையில் கடந்த ஆண்டு ஊரடங்கு காலத்தில் சின்னத்திரை காமெடி பிரபலம் வடிவேல் பாலாஜி தனது உடல் நல குறைவால் மரணமடைந்தார். இவரது மறைவு அனைத்து தரப்பினரையும் அதிர வைத்தது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

வடிவேல் பாலாஜி தனக்கு என்ன பிரசனைகள் இருந்தாலும் கேமராவிற்கு முன் வந்தால் மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பவர் என்று பலரும் தற்போது வரை அவரது பெருமைகளை பேசி வருகின்றனர். இப்படிப்பட்ட வடிவேல் பாலாஜிக்கு நெருக்கமானவர் தான் புகழ். மேலும் பாலாஜியின் பெரிய ஆசையே புகழுக்கு பெரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதே.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ரெம்டெசிவிர் போலி மருந்தால் மருத்துவர் இறந்தார் – மருத்துவமனையில் நடந்த விபரீதம்!!!

ஆவர் எண்ணியது போல் அவருக்கு மிக பெரிய அங்கீகாரம் தற்போது கிடைத்துவிட்டது. ஆனால் அதனை காண வடிவேல் பாலாஜி இல்லாதது தான் சற்று வேதனைக்குரியது. இன்று வடிவேல் பாலாஜியின் பிறந்தநாள். இதனை முன்னிட்டு புகழ் தனது இன்ஸ்டா பக்கத்தில் ‘மக்களை என்றும் சந்தோசமாக வைத்திருக்க வேண்டும் என்று நீ ஆசைப்பட்டதை நான் நிறைவேற்றுகிறேன் மாமா’ என்று உணர்ச்சிபூர்வமாக தெரிவித்துள்ளார். இது ரசிகர்களை சற்று கண்கலங்க வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here