ரெம்டெசிவிர் போலி மருந்தால் மருத்துவர் இறந்தார் – மருத்துவமனையில் நடந்த விபரீதம்!!!

0

தனியார் மருத்துவமனையில் கோவிட் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் போலி ரெம்டெசிவிர் மருந்து போடப்பட்டதால் உயிர் இழந்தார்.

ரெம்டெசிவிர் போலி மருந்தால் மருத்துவர் இறந்தார்:

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திண்டிவனத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர்க்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் போது போலி ரெம்டெசிவிர் மருந்தை செலுத்தியதால் உயிர் இழந்துள்ளார் என்று கூறப்பட்டதால் தமிழக சுகாதாரத் துறை தனியார் மருத்துவமனையின் கோவிட் சிகிச்சை உரிமத்தை ரத்து செய்தது.

இறந்த மருத்துவரின் சகோதரரிடமிருந்து செவ்வாய்க்கிழமை சுகாதார அமைச்சருக்கு புகார் வந்ததைத் தொடர்ந்து சுகாதாரத் துறையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது “இறந்த மருத்துவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டதாகவும், அப்போது போலி அளவுகளுடன் நிர்வகிக்கப்பட்ட ரெம்டெசிவிர் மருந்தை செலுத்திய பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்து அவரது மரணத்திற்கு வழிவகுத்ததாகவும்” புகாரில் கூறினார்.

இதனை தொடர்ந்து மருத்துவமனையில் விசாரணை நடத்தியபோது மருத்துக்குப்பிகள் புதுச்சேரியில் வாங்கப்பட்டதாகவும் அதற்கான விலைப்பட்டியல் வைத்திருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் கூறினார்கள். இதை கண்டித்த தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது அதில் “ரெம்டெசிவிர் ஊசி மருந்துகள் திறந்த சந்தையில் இருந்து வாங்கக்கூடாது” என்று உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here