வித்தியாசமான கான்செப்ட்டில் போட்டோஷூட் செய்த மைனா,லோகேஷ் – கண்கலங்கிய ரசிகர்கள்!!

0

விஜய் தொலைக்காட்சியின் மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமான “மைனா” நந்தினி தற்போது தனது கணவருடன் வித்தியாசமான முறையில் போட்டோஷூட் நடத்தி உள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை “மைனா” நந்தினி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சரவணன் மீனாட்சி” சீரியலின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான், “மைனா” நந்தினி. பின், இவர் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

மருத்துவமனைகளில் ஏப்ரல் 26க்கு பின் சிகிச்சை நிறுத்தம் – அதிர்ச்சியில் மக்கள்!!

அது மட்டும் அல்லாமல் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக “டான்ஸ் ஜோடி டான்ஸ்” என்ற நிகழ்ச்சியில் நடிகர் யோகேஷுடன் பங்கேற்றார்.

இவரது செமிஸ்டரியும் நன்றாக இருந்தது. அதே போல் யோகேஷ் அனைவர் முன்பும் நந்தினியை காதலிப்பதாக கூறி ப்ரொபோஸ் செய்தார்.

இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இப்படியாக இருக்க, இருவரும் ஒரு போட்டோஷூட் நடத்தி உள்ளனர்.

போட்டோஷூட் என்பது அனைவரும் செய்வது தான், ஆனால், இவர்கள் எடுத்துள்ள போட்டோஷூட் ஒரு கருத்தினை மையமாக கொண்டுள்ளது.

ஒரு புகைப்படம் ஏழ்மையான காதல் தம்பதிகள் போலவும், பின், ஒரு ஹிந்து தம்பதிகள் போலவும், ஒரு கிறிஸ்டின் மற்றும் முஸ்லீம் தம்பதிகள் போலவும் எடுத்துள்ளனர்.

கடைசியாக, ஒரு வயோதிக தம்பதிகள் இருப்பது போலவும் எடுத்துள்ளனர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here