IPL டிக்கெட்டை பிளாக்கில் விற்ற நாஞ்சில் விஜயன்.. அம்மாடி ஒரு டிக்கெட் இத்தனை ஆயிரமா?

0
IPL டிக்கெட்டை பிளாக்கில் விற்ற நாஞ்சில் விஜயன்.. அம்மாடி ஒரு டிக்கெட் இத்தனை ஆயிரமா?
IPL டிக்கெட்டை பிளாக்கில் விற்ற நாஞ்சில் விஜயன்.. அம்மாடி ஒரு டிக்கெட் இத்தனை ஆயிரமா?

விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயன் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில், அவர் தற்போது செய்திருக்கும் காரியம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாஞ்சில் விஜயன்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காமெடி ஷோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அந்த வகையில் அது இது எது, கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சியில் பெண் வேடம் அணிந்து மக்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தவர் தான் நாஞ்சில் விஜயன். அதன் பிறகு வெள்ளித்திரைக்கு சென்ற அவர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

ஓரளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் அவ்வப்போது சில சர்ச்சைகளிலும் சிக்குவது வழக்கம். டிக்டாக் பிரபலம் சூர்யா தேவி மற்றும் வனிதா பீட்டர் பால் திருமணம் போன்ற விஷயங்களில் தலையிட்டு கடுமையாக விமர்சித்தார். இதனால் சில மர்ம நபர்கள் அவரின் வீட்டிற்கு சென்று உருட்டு கட்டையால் தாக்கியுள்ளனர்.

கர்ப்பமானதை போட்டோ போட்டு குட் நியூஸ் சொன்ன பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.., குவியும் வாழ்த்துக்கள்!!

இப்படி தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய இவர் தற்போது செய்திருக்கும் காரியம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை சேப்பாக்கத்தில் CSK Vs DC அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டிக்கான டிக்கெட்டை 1500 ரூபாய்க்கு வாங்கி, அதை 6500 ரூபாய்க்கு பிளாக்கில் விற்றது தற்போது தெரியவந்துள்ளது. இவர் மட்டுமின்றி நாஞ்சில் விஜயனுடன் சேர்ந்து துணை நடிகை கும்தாஜ் என்பவரும் விற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here