டுவிஸ்ட்க்கு மேல் டுவிஸ்ட் வைக்கும் விஜய் டிவி – யார் வெல்லப்போகிறார்கள்? – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!!

0

விஜய் டிவியில் தற்போது முடியும் தருவாயில் இருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5. இந்த நிலையில் இந்நிகழ்ச்சியின் பைனலில் மிகப்பெரிய ட்விஸ்ட் ஒன்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 5:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டு வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5. தற்போது இந்த ஷோ 100 நாட்களை எட்டியுள்ள நிலையில் இறுதி போட்டியாளர்களாக நிரூப், ராஜு, பிரியங்கா, பாவனி, அமீர் ஆகியோர் உள்ளனர். பிக் பாஸ் பார்வையாளர்கள் ராஜூ ஜெயமோகன் தான் வின்னராக வருவார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் பிக் பாஸ்ஸை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்று கூறிக் கொண்டே இருப்பார்.

அதற்கேற்றார் போல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத அதிரடி திருப்பம் அரங்கேற உள்ளது என்று இணையத்தில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த நாட்களில் இருந்து அனைவரையும் சிரிக்க வைத்து வந்தவர்கள் ராஜு மற்றும் பிரியங்கா. அதனால் அவர்கள் தான் முதல் இரண்டு இடங்களை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாவனி மற்றும் நிரூப் இவர்களில் ஒருவர்தான் டைட்டில் வின்னர் ஆகப் போகின்றனர் என்ற தகவல் பரவி வருகிறது. இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here