கதறிய குடும்பம் – துப்பாக்கி முனையில் ஹேமா, லட்சுமி! பீஸ்ட்டுக்கே டப் கொடுக்கும் பாரதி கண்ணம்மா எபிசோட்!!

0
கதறிய குடும்பம் - துப்பாக்கி முனையில் ஹேமா, லட்சுமி! பீஸ்ட்டுக்கே டப் கொடுக்கும் பாரதி கண்ணம்மா எபிசோட்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில், பீஸ்ட் படத்திற்க்கே டப் கொடுக்கும் பல டுவிஸ்ட் நிறைந்த அதிரடி காட்சிகள் இன்றைய எபிசோடில் காட்டப்பட உள்ளது.

பாரதி கண்ணம்மா  எபிசோட்  :

பாரதியின் மருத்துவமனைக்குள் நுழைந்த தீவிரவாதிகள், மொத்தத்தையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருகின்றனர். மத்திய அமைச்சருக்கு ஆபரேஷன் செய்யப்போகும் பாரதி, தனது முயற்சியில் தோற்றால் ஹேமாவையும் லட்சுமியையும் சுட்டு தள்ளுமாறு, தீவிரவாதிகளின் தலைவன் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளான். பாரதியின் மொத்த குடும்பமும், தீவிரவாதிகளின் பிடியில் உள்ளனர். இந்த இக்கட்டான சூழலில், பாரதி ஆப்ரேஷன் செய்ய தயாராகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆப்ரேஷன் முடிந்த பிறகு, அமைச்சருக்கு எந்த பாசிட்டிவான மூவும் இல்லை. இதனால், குழந்தைகளை சுட்டு தள்ளுமாறு தீவிரவாதிகளின் கேங் லீடர் உத்தரவிடுகிறான். இதை பார்த்த கண்ணமாவும், குழந்தைகளும் கதறி துடிக்கின்றனர். ஆனால், பாரதி எப்படியும் ஆப்ரேஷனை வெற்றிகரமாக முடிப்பார் என  கண்ணம்மா நம்புகிறார்.

இப்படி பீஸ்ட் படத்துக்கு டப் கொடுக்கும், பல அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ட்விஸ்ட்களுடன் பாரதி கண்ணம்மா சீரியல் சென்று கொண்டிருக்கிறது. இது குறித்த காட்சிகள், இன்றைக்கு வரும் எபிசோடுகளில்  காட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here