பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் சீரியல் நடிகை ரோஷினி? – அவரே வெளியிட்ட முக்கிய தகவல்!

0
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் சீரியல் நடிகை ரோஷினி? - அவரே வெளியிட்ட முக்கிய தகவல்!

பாரதி கண்ணம்மா சீரியலில் பிரபலமானவர் தான் நடிகை ரோஷினி. இவர் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்வது குறித்து பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ரோஷினி:

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மக்களை கவர்வதற்காக பல சீரியல்கள் ஒளிபரப்பாகிறது. ஆனால் மக்களுக்கு மிகவும் பிடித்து போன சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா தொடர் தான். இந்த சீரியல் ஆரம்பம் ஆனதில் இருந்து விஜய் டிவியின் டி.ஆர்.பி-யில் முதல் இடத்தில் இருந்தது. இதில் பாரதியாக நடித்த அருண் பிரசாத் -க்கும் , கண்ணம்மாவாக நடித்த ரோஷினி -க்கும் இடையே காதல் காட்சிகள் மக்கள் அனைவருக்கும் பிடித்து போனது. அதன் பின்னர் திடீரென நடிகை ரோஷினி தொடரில் இருந்து காரணமின்றி விலகிய சம்பவம் சின்னத்திரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இதனை ஏற்றுக் கொள்ளாமல் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இதனை தொடர்ந்து நடிகை ரோஷினி குக் வித் கோமாளி சீசன் 3 ல் கலந்து கொண்டார். இந்நிலையில் அண்மையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு ரோஷினி பேட்டி கொடுத்துள்ளார். அதாவது அவர் பேசியதாவது, “பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகும் சூழ்நிலை ஏற்பட்டதால் விலகினேன். நான் விலகிய பிறகு தான் தெரிந்தது ரசிகர்கள் மனதில் எந்த அளவு இருக்கிறோம் என்று, சிலர் எனக்கு மெசேஜ் செய்து என்ன ஆனது என்று விசாரித்தனர்.

அவர்கள் கேட்கும் போது ரொம்ப நெகிழ்வா இருந்தது. தற்போது சினிமா துறையில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டபோது நடிகை ரோஷினி சற்றும் யோசிக்காமல் அதற்கு வாய்ப்பே இல்லை, அதில் கலந்து கொள்ள நிதானமான மனசு வேண்டும்” என்று கூறியுள்ளார். இதன் மூலம் இவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here