போடு.. இனிதான் தரமான சம்பவம் இருக்கு.. ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை 2023 – அட்டவணை இதோ!

0
போடு.. இனிதான் தரமான சம்பவம் இருக்கு.. ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை 2023 - அட்டவணை இதோ!
போடு.. இனிதான் தரமான சம்பவம் இருக்கு.. ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை 2023 - அட்டவணை இதோ!

ஆடவர் ஹாக்கி உலக கோப்பை தொடரை நடத்த இந்தியா தேர்வாகியுள்ள நிலையில் அது குறித்து சில விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

உலகக் கோப்பை 2023!

FIH சார்பில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஆடவர் ஹாக்கி உலக கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் புவனேஸ்வரில் கலிங்கா மைதானத்திலும், ரூர்கேலாவில் பிஸ்ரா முண்டா மைதானத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி FIH ஆண்கள் ஹாக்கி தொடருக்கான தரவரிசை பட்டியலில் முதல் இடங்களில் உள்ள 16 நாடுகள் பங்கேற்க உள்ளனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த 16 அணிகளும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிக்காக தயாராகி வருகின்றனர். அதன்படி குரூப் A பிரிவில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ், தென் அமெரிக்கா அணிகளும், குரூப் B பிரிவில் பெல்ஜியம், ஜெர்மனி, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய அணிகளும், குரூப் C பிரிவில் நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா மற்றும் சிலி ஆகிய அணிகளும், குரூப் D இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் வேல்ஸ் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளனர்.

ஹாக்கி உலகக் கோப்பை தொடர் 1971 ஆம் ஆண்டு துவங்கியதில் இருந்து இந்தியா நான்காவது முறையாக நடத்த உள்ளது. இதற்கு முன்னதாக 1982(மும்பை), 2010(டெல்லி), 2018(புவனேஷ்வர்) ஆகிய ஆண்டு நடைபெற்றது. இந்த மூன்று ஆண்டுகளிலும் பெல்ஜியம் அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்திய ஆடவர் ஹாக்கி அணி 1975 ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது வரை இறுதிப் போட்டியில் வெல்லவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here