யூடுப் சேனல் தொடங்கும் நடிகர் விஜய் – மக்கள் இயக்க நிர்வாகிகள் தகவல்!!

0

நடிகர் விஜய் அவர்கள் அரசிலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற குழப்பம் நிலவி வரும் நிலையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புதிய யூட்யூப் சேனல் ஒன்று தொடங்கப்பட உள்ளது. இது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் செய்யப்படும் நலத்திட்டங்களை வெளிகொண்டுவரவே உருவாக்கப்பட்டது. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்புகள் ஓரிரு தினங்களில் வெளியிடப்படும் என செய்தி வெளியாகிள்ளது.

விஜய் யூடியூப் சேனல்

தமிழகத்தில் வருகிற ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கு எல்லா திராவிட கட்சிகளும், அரசியல் கட்சிகளும் ஆயத்தமாயுள்ளனர். நடிகர் விஜயும் அரசியலில் குதிப்பார் என்று சொல்லப்படும் நிலையில், அவர் அதை மறுத்து வந்தார், எனினும், அவரது தந்தையான சந்திரசேகர் “அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்” என்ற பெயரில் கட்சி ஒன்றினை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வெகு காலமாக விஜய் அரசியலுக்கு வருவார் என கூறப்பட்டிருந்த நிலையில், விஜய்யின், தந்தையான சந்திரசேகர் செய்த இந்த செயல் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. மேலும், நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் கூடிய விரைவில் அரசியல் என்ட்ரி குறித்து முடிவெடுக்க உள்ளார். இதனால், விஜய்யும் ரஜினிகாந்தும் அரசியலில் இணைவார்களா? என்ற சூழல் நிலவி வரும் நிலையில், விஜய்யிடம் இருந்து கட்சி ஆரம்பித்தது குறித்து எதிர்ப்பு வந்துள்ளதால் சந்திரசேகர் இந்த முடிவினை கைவிட்டார்.

நாடு முழுவதும் உள்ள தளபதி ரசிகர்கள், பொதுமக்களுக்காக நலத்திட்டங்கள் பல செய்து வருகின்றனர். இதனால் ரொம்ப காலமாகவே விஜய் அரசியலுக்கு வருவார் எனவும், புரட்சி தலைவர் எம்ஜிஆர் , விஜயகாந்த், சரத்குமார், சீமான், ரஜினிகாந்த், கமஹாசன் வரிசையில் விஜய்யும் இணைவார் என பரவலாக சொல்லப்படுகிறது. இருந்தாலும், நடிகர் விஜய் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், சந்திரசேகரின் இந்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக இந்தியா முழுவதும் உள்ள விஜய் மக்கள் இயக்கதை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இன்று காலை ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்த கூட்டத்தில், மக்களுக்கு நலத்திட்டங்களை செய்யும் வகையில் ஒரு யூடியூப் சேனலை ஆரம்பிக்க திட்டமிட்டனர். இந்த சேனல் மூலமாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் செய்யப்படும் நலத்திட்டங்களை வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும், இது குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியிடப்படும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here