Wednesday, April 24, 2024

விவசாயிகள் 110 பேர் கழுத்தறுத்து கொலை – நைஜீரியாவில் பயங்கரவாதிகள் வெறிச்செயல்!!

Must Read

நைஜீரியாவில் மக்கள், பயங்கரவாத அமைப்பினை பற்றி அரசுக்கு தகவல் தெரிவிக்கின்றனர் என்ற ஆத்திரத்தில் மனிதாபிமானம் துளியும் இன்றி அப்பாவி விவசாயிகள் 110 பேரை பயங்கரவாத அமைப்பினை சேர்ந்தவர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

நைஜீரியாவில் கொடூரம்:

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் உள்ள வடகிழக்கு பகுதியில் எப்படியாவது ஐ.எஸ். அமைப்பினை நிறுவ வேண்டும் என்ற நோக்கில் பல பயங்கரவாத அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. அதற்கு முதல் கட்டமான அப்பாவி மக்களை துன்பப்படுத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாதிகள் போகோ ஹரம் பயங்கரவாத அமைப்பினை சேர்ந்தவர்கள்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இவர்களது ஆதிக்கம் மற்றும் கொடுமை அந்த அப்பகுதியில் அதிகரித்து வந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் சிலர் இவர்களை பற்றி அரசுக்கு தகவல் அளித்துள்ளனர். அதே போல் இவர்களிடம் இருந்து தங்களை காப்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளனர். இதனை அறிந்த பயங்கரவாத அமைப்பினர் மக்கள் மீது மிகந்த கோபம் அடைந்துள்ளனர். அவர்களை பழிவாங்க காத்துக் கொண்டிருந்தவர்கள், மைடூகுரி நகரில் அருகே கோஷோபே கிராமத்தில் சில விவசாயிகள் அப்போது வேலை பார்த்து கொண்டிருந்தனர்.

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்- முதல்வர் அறிவிப்பு!!

அப்போது அங்கு வந்த பயங்கரவாத அமைப்பினர் சிலர் வேலை பார்த்து கொண்டு இருந்த விவசாயிகளை கடத்தி கை மற்றும் கால்களை கட்டி போட்டுள்ளனர். அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த பெண்களையும் கடத்தியுள்ளார். கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த விவசாயிகளை துளி கூட மனிதாபிமானம் இன்றி அவர்களது கழுத்தினை அறுத்து கொன்றுள்ளனர். இதில் 110 விவசாயிகள் பரிதாபமாக மரணம் அடைந்துள்ளனர். இந்த அசம்பாவிதத்திற்கு தற்போது ஐ.நா சபை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -