விஜய் மிஸ் பண்ணிட்டாரு., அதை நான் பிக்கப் பண்ணிட்டேன்., உண்மையை ஒப்புக் கொண்ட விஜய் ஆண்டனி!!

0
விஜய் மிஸ் பண்ணிட்டாரு., அதை நான் பிக்கப் பண்ணிட்டேன்., உண்மையை ஒப்புக் கொண்ட விஜய் ஆண்டனி!!
விஜய் மிஸ் பண்ணிட்டாரு., அதை நான் பிக்கப் பண்ணிட்டேன்., உண்மையை ஒப்புக் கொண்ட விஜய் ஆண்டனி!!

கோலிவுட் திரையில் இசையமைப்பாளர், நடிகர், பாடகர் என பன்முக திறமையுடன் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. தற்போது இவர் இயக்கத்தில் இவரே நடித்திருக்கும் பிச்சைக்காரன் 2 திரைப்படம் நாளை திரைக்கு வர இருக்கிறது. இதன் promotion விழா சென்னை மற்றும் ஹைதராபாத்தில் அண்மையில் நடந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

விஜய் ஆண்டனியின் ஆக்ட்டிங் கெரியரில் முக்கிய திருப்பு முனையை ஏற்படுத்தியிருந்த பிச்சைக்காரன் 1 படத்தின் இயக்குனர் சசி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் கூறியதாவது, இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு முன் முன்னணி ஹீரோக்கள் பலரிடம் அணுகினேன். ஆனால் அவர்கள் எல்லாம் இதை ஒரு பிச்சைக்காரனின் கதையாக பார்த்து மறுத்து விட்டனர். ஆனால் இதை விஜய் ஆண்டனி மட்டும் தான் ஒரு பணக்காரரின் கதையாக பார்த்தார் என கூறியுள்ளார்.

படக்குழுவை பதட்டத்திலேயே வைத்திருக்கும் வெற்றிமாறன் – எப்போது விடுதலை கிடைக்கும்?

இதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் இந்த படத்தில் உங்களை தவிர வேறு யார் நடித்திருந்தால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும் என விஜய் ஆண்டனியிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் விஜய் மற்றும் மகேஷ் நடித்திருந்தால் இந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருந்திருக்கும் என கூறியுள்ளார். இப்படி ஒரு நல்ல படத்தில் நடிப்பதை முன்னணி ஹீரோக்கள் மிஸ் பண்ணிவிட்டனர் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here