
நம்மில் பலர் முடி உதிர்வு பிரச்சனையை பல வருடங்களாக சந்தித்து வருகின்றனர். இதற்காக காசுகளை செலவு செய்து பல treatment களையும் எடுத்து கொள்கின்றனர். ஆனால் எந்த ஒரு செலவும் இல்லாமல் எப்படி முடி வளர்ச்சியை அதிகரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்;
- வெந்தயப் பொடி – 25 கிராம்
- விளக்கெண்ணெய் – 5 டீஸ்பூன்
- கற்றாழை கீற்று – 2 மடல்
செய்முறை விளக்கம்;
இந்த ஹேர் பேக் தயாரிப்பதற்கு 2 கீற்று கத்தாழை மடல்களை எடுத்து சுத்தம் செய்து அதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளவும். இப்போது நாம் அரைத்துள்ளதை சல்லடையில் வடித்து ஒரு பவுலில் ஊற்றி வைத்து கொள்ளவும். இதோடு 25 கிராம் வெந்தய பொடி மற்றும் 5 டீஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.
“தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு இனி எந்த கட்டணமும் இல்லை”…, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!
இப்போது நாம் தயார் செய்து வைத்துள்ள இந்த ஹேர் பேக்கை double பாயில் முறையில் boil செய்து வடிகட்டி கொள்ளவும். இந்த பேக்கை நம் தலை முடியில் அப்ளை செய்து ஒரு 20 நிமிடங்களுக்கு பிறகு ஷாம்பு யூஸ் செய்து வாஷ் செய்து கொள்ளவும். இந்த ஹேர் பேக்கை நாம் பாலோவ் செய்வதன் மூலம் நம் ஹேர் growth அதிகரிக்க உதவியாக இருக்கும்.